சுக்கிட்டி பழம் ... 
உணவு / சமையல்

மாமருந்தாகும் மணத்தக்காளி பழம்!

ஆர்.பிரசன்னா

சுக்கிட்டி பழம் என்று அழைக்கப்படும் மணத்தக்காளி பழம் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அதே சமயம் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. மணத்தக்காளி கீரையில் எவ்வளவு சத்துக்கள் உள்ளதோ, அதே அளவு மணத்தக்காளி பழங்களிலும் உண்டு.

இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து, உடல் குளிர்ச்சி அடையும். உஷ்னத்தினால் ஏற்படும் கண் எரிச்சல் தீரும்.

மணத்தக்காளியில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இதனை சப்பிடும்பொழுது பசி இன்மை, அஜீரணம் நீங்கி செரிமான பிரச்னைகளை தடுக்கும். மலச்சிக்கலை குறைத்து வயிற்று பகுதியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் எளிதில் உட்கிரகிக்க இப்பழங்கள் பயன்படுகிறது.

மணத்தக்காளி பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் உள்ள கழிவுகள், நச்சுக்கள் நீங்கி உடல் ஆரோக்கியதையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.

பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், கர்ப்ப காலத்திலும் இப்பழங்களை சாப்பிட்டு வரலாம். இது தாய்க்கும், வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் பெரிதும் பயன்படுகிறது.

வாய்ப் புண் மற்றும் வயிற்றுப் புண் இருக்கும் சமயங்களில், மணத்தக்காளி இலையுடன், மணத்தக்காளி பழங்களையும் சேர்த்து அடிக்கடி சாப்பிடும்போது இப்பிரச்சனைகள் குறைய தொடங்கும்.

சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மருத்துவ குணங்களும் மணத்தக்காளி பழங்களில் நிறைந்துள்ளன. இப்பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அதிகரித்து, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

இப்பழங்களை சாப்பிட்டு வரும்போது, சிறுநீரை பெருகச் செய்து, சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள், நச்சுக்களை வெளியேற்றி, சிறுநீரகத்தின் செயல்பாட்டினை அதிகரிக்கும்.

கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வைட்டமின்கள் இப்பழங்களில் நிறைந்துள்ளன. இப்பழங்களை சாப்பிடுவதால் கண் பார்வை கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கலாம். கண் எரிச்சல், கண் சூடு போன்றவற்றை குறைத்து கண்களை குளிர்ச்சியாக்கும்.

புற்றுநோயை எதிர்க்கும் மருத்துவ குணங்கள் இப்பழங்களில் இருப்பதால். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்காமல் இப்பழங்களை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

நோய் வராமல் தடுக்கவும், நோய் ஏற்பட்டாலும் அதைப் போக்கும் வல்லமையும் மணத்தக்காளிக்கு உண்டு. தாகத்தை தணிக்க மணத்தக்காளி பழம் உதவும். உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கவும், பசியைத் தூண்டவும் மணத்தக்காளி பழத்தைப் பயன்படுத்தலாம். 

சுக்கிட்டி பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் கருத்தரிக்க செய்யும். முதலிலேயே கருத்தரித்திருந்தால், கருவை வலுவாக பாதுகாக்க மணத்தக்காளி பழம் மற்றும் கீரை உதவும்.

இது போக திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு மணத்தக்காளி பழம் மற்றும் கீரை சாப்பிடுவதன் மூலம் கருத்தரிக்க அதிகபட்ச வாய்ப்பு உள்ளது.

இதய பலவீனம் கொண்டவர்கள் வாரம் மூன்று முறை  மணத்தக்காளி சாறு பருகி வந்தால்,  இதயம் பலமாகும்.

காது பளிச் பளிச்சென்று வலிக்கும்போது மணத்தக்காளி பழச்சாறு அரை கப் அருந்தினால் காது வலி தீரும்.

பஸ் பயணத்தின்போது ஏற்படும் வாந்தி வருவது போன்ற உணர்வை மணத்தக்காளி பழங்கள் குறைக்க வல்லவை.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT