மாம்பழப் பாயசம் 
உணவு / சமையல்

சுவையான சத்து மிக்க மாம்பழப் பாயசம்!

கல்கி டெஸ்க்

தேவையான பொருட்கள்:

கனிந்த மாம்பழம் – 2,

பால் – 2 டம்ளர்,

சர்க்கரை – 1 டம்ளர்,

முந்திரிப்பருப்பு – 12,

ஏலக்காய்ப்பொடி – ½ ஸ்பூன்,

குங்குமப்பூ – சிறிதளவு

செய்முறை:

பாயாசங்களில் பல வகையான பாயாசங்கள் உண்டு. அதில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாயாசம் மாம்பழ பாயசம். மாம்பழம் அதிகம் விளையும் ஏப்ரல் மே மாதங்களில் அடிக்கடி செய்து மகிழலாம். இது மிகவும் சுவையான சத்து மிக்க பாயசம்.

இதன் எளிமையாக எப்படி செய்வதென பார்க்கலாம்

மாம்பழப் பாயசம்

மாம்பழங்களைக் கழுவி, பெரியதுண்டங்களாக நறுக்கி ஆவியில் வேக வைக்கவும். வெந்து, ஆறியதும் தோலை எடுத்து விட்டு,சிறிது நீர் கலந்து, சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

அடுப்பு நிதானமாக எரியட்டும். கொதித்ததும் இறக்கிவைத்து, ஏலக்காய்ப்பொடி,நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, சிறிது பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து சூடாக்கவும்.

பாலைத் தனியே நன்கு காய்ச்சி, பாயசம் சூடு ஆறியதும் கலக்கவும், மாம்பழ சீஸன் வருவதால் இந்தப் பாயசம் செய்து சுவைக்கலாம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT