முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். இதை பெரும்பாலும் தோசை மாவில் சேர்த்து தோசை சுட்டு சாப்பிடுவார்கள். ஆனால் இதைப் பயன்படுத்தி சட்னி செய்தால் இட்லி மற்றும் தோசைக்கு சூப்பராக இருக்கும். இதனால் உங்களுடைய மூட்டு வலி, சளித் தொந்தரவு போன்ற அனைத்தும் நீங்கும்.
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை - ¼ கப்
பூண்டு - 3 பல்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
துருவிய தேங்காய் - ½ கப்
வரமிளகாய் - 3
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - ½ ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் முடக்கத்தான் கீரையை குறைந்த தீயில் வதக்க வேண்டும். பின்னர் அதை எடுத்து வேறு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அதே வானிலியில் நல்லெண்ணெய் சேர்த்து புளி, பூண்டு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.
வதக்கிய பொருட்களை தனியாக வைத்து ஆறவிடுங்கள். பின்னர் ஒதுக்கி வைத்துள்ள எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி கலக்கினால் சூப்பர் சுவையில் முடக்கத்தான் கீரை சட்னி ரெடி. இந்த சட்னியை நீங்கள் செய்தால் அனைவரும் இரண்டு மூன்று இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள். அந்த அளவுக்கு நீங்கள் நினைப்பதை விட இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.
எனவே, வித்தியாசமான முறையில் ஆரோக்கியம் நிறைந்த சட்னி செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த முடக்கத்தான் சட்னி ரெசிபியை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.