Night dinner recipes. 
உணவு / சமையல்

இட்லி மாவு இல்லாத நேரத்தில் இந்த இன்ஸ்டன்ட் டின்னர் முயற்சி செஞ்சு பாருங்க! 

கிரி கணபதி

தென்னிந்தியாவில் டிபன், டின்னர் என்றாலே இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுகள்தான். இந்த உணவுகள் பெரும்பாலும் ஒரே மாதிரியான மாவைப் பயன்படுத்திதான் செய்யப்படுகிறது. அதாவது இவை அனைத்தும் அரிசி உளுந்து மாவில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் எல்லா நேரங்களிலும் நாம் இட்லி மாவு அரைத்து வைத்திருப்போம் என சொல்ல முடியாது. எப்போதாவது வீட்டில் மாவு இல்லை என்றாலோ அல்லது கடைகளில் கிடைக்கவில்லை என்றாலோ, இனி கவலைப்பட வேண்டாம். 

உங்களுக்காகவே, உடனடியாக தயாரிக்கக் கூடிய இன்ஸ்டன்ட் டின்னர் ரெசிபி ஒன்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 250 கிராம் 

வெங்காயம் - 1 நறுக்கியது

இஞ்சி - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2 நறுக்கியது

கருவேப்பிலை - சிறிதளவு

ரவை - 5 ஸ்பூன் 

சீரகம் - ½ ஸ்பூன் 

பெருங்காயம் - 2 சிட்டிகை 

உப்பு - தேவையான அளவு

தயிர் - 3 ஸ்பூன் 

செய்முறை

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவை சேர்த்து, பின் அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கலக்கவும். 

பின்னர் கரண்டியைப் பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கிளறி விடவும். தொடர்ந்து அவ்வாறு செய்யும்போது இட்லி மாவு பதத்திற்கு வந்ததும், அந்த பாத்திரத்தை மூடி சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். 

இப்போது உங்கள் வீட்டில் பணியாரக் கடாய் இருந்தால் அதை சூடாக்கி அதன் குழிகளில் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் சிறிய கரண்டி பயன்படுத்தி தயாரித்து வைத்துள்ள மாவை எடுத்து குழிகளில் ஊற்றி மிதமான சூட்டில் வேக விடுங்கள். 

சிறிது நேரம் கழித்து அவற்றை பணியாரக் கரண்டி பயன்படுத்தி திருப்பி போட்டு வேக வைத்தால், சுவையான இன்ஸ்டன்ட் டின்னர் தயார். இவற்றுடன் உங்களுக்குப் பிடித்த சட்னி வகைகளை சேர்த்து ருசித்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். கட்டாயம் இந்த ரெசிபியை ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT