கருப்பு உளுந்து... 
உணவு / சமையல்

எலும்பை வலுவாக்கும் சத்தான கருப்பு உளுந்து இட்லிப் பொடி!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ருசியான அதே சமயம் சத்தான இட்லி பொடி கருப்பு உளுந்தைக் கொண்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கருப்பு உளுந்து ஒரு கப் 

கடலைப்பருப்பு அரை கப் 

கருப்பு எள் 4 ஸ்பூன் 

உப்பு தேவையானது 

மிளகாய் 15 

பெருங்காயக்கட்டி ஒரு துண்டு 

சர்க்கரை ஒரு ஸ்பூன்

புளி கொட்டை பாக்களவு

கறிவேப்பிலை ஒரு கொத்து 

பூண்டு பற்கள் 4( விருப்பப்பட்டால்)

நல்லெண்ணெய் 2 ஸ்பூன்

வெறும் வாணலியில் ஒவ்வொரு பொருட்களாக சிறிது எண்ணெய் விட்டு நன்கு கருகாமல் சிவக்க வறுத்தெடுக்க வேண்டும். கருப்பு உளுந்து, கடலைப்பருப்பு, எள், பெருங்காய கட்டி, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து எடுத்துக்கொண்டு அந்த வாணலியின் சூட்டிலேயே புளியை போட்டு நன்கு சூடானதும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது ஆற விட்டு மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். விருப்பப்பட்டால் பூண்டு பற்களையும் நன்கு வறுத்தெடுத்து சேர்த்து அரைக்கவும். கடைசியாக ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து ஆறியதும் டப்பாவில் பத்திரப்படுத்த சத்தான ருசியான இட்லி மிளகாய் பொடி தயார்.

காலை வேளையில் ஆபீசுக்கு கிளம்பும் அவசரத்தில் சாம்பார் வைக்க நேரமில்லாமல் இருந்தால் இதனை சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு ரெண்டு ஸ்பூன் பொடியை போட்டு கலந்து கெட்டி தயிர், சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும். இட்லி தோசைக்கும் தோதாக இருக்கும்.

சாம்பார் வைக்க நேரமில்லையா இரண்டே நிமிடத்தில் சூப்பர் சுவையில் ரைஸ் மிக்ஸ்!

ரைஸ் மிக்ஸ்...

ரைஸ் மிக்ஸ்:

பொட்டுக்கடலை ஒரு கப் 

பூண்டு 6 பல் 

மிளகாய் வற்றல் 4

உப்பு

பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் முதலில் மிளகாய் வற்றலை போட்டு சூடு வர வறுத்துக் கொண்டு தோல் உரித்த பூண்டையும் போட்டு வறுக்கவும். அத்துடன் பொட்டுக்கடலையையும் சேர்த்து சூடு வர இரண்டு நிமிடம் வறுத்து விடவும்.  ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து பொடி செய்ய நிமிடத்தில் ரெடியாகிவிடும். இதனை சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு பிசைந்து சுட்ட அப்பளம் அல்லது பொரித்த அப்பளத்துடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். 

தேங்காய்ப் பொடி, பருப்பு பொடி போல் இந்த பொடியையும் செய்து வைத்துக் கொண்டால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சாம்பார் வைக்க நேரமில்லாத சமயத்தில் சூடான சாதத்தில் இரண்டு ஸ்பூன் பொடி போட்டு சிறிது நெய் விட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT