வரகு கஞ்சி  www.youtube.com
உணவு / சமையல்

சத்தான சிறுதானிய ஸ்பெஷல் ரெசிபிஸ்!

கல்கி டெஸ்க்

வரகு கஞ்சி  

தேவை: வரகு அரிசி – ½ கப், கேரட், பட்டாணி - ¼ கப், கொத்தமல்லி - சிறிது, கடுகு - ¼ டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2. வெங்காயம் -1, எண்ணெய் - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை, உப்பு – தேவைக்கு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வதக்கிகொள்ளவும். கோட் பட்டாணி சேர்க்கவும். மஞ்சள் பொடி மற்றும் உப்பையும் சேர்க்கவும். வாகு அரிசியை போட்டு 1 கப் தண்ணீர் சேர்க்கவும். 10-15 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

வரகு அரிசி வெந்தவுடன், சூடாகப் பரிமாறவும்.

வரகு தயிர் சாதம்    

தேவை: வரகு அரிசி – ¼  கப், பால் - ¼  கப், தயிர் - 2 டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு - ¼  டீஸ்பூன், உப்பு -தேவைக்கு, இஞ்சித் துருவல் - ½ டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1. கொத்தமல்லி - சிறிது

வரகு தயிர் சாதம்

செய்முறை: வரகு அரிசியை ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும்.

நன்கு குழைவாக வேக வைத்த சாதத்தை மசித்து, ஆற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் தாளித்தபின், வெந்த அரிசியில் சேர்க்கவும்.

நன்கு ஆறியவுடன் பால், தயிர் சேர்த்துக் கையால் நன்கு பிசையவும் பச்சை மிளகாயைப் பரிமாறும் முன் எடுத்து விடவும். கொத்தமல்லி அலங்கரித்துப் பரிமாறவும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT