Sundal recipes 
உணவு / சமையல்

சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்: பச்சை அவரை சுண்டல் - பட்டர் பீன்ஸ் சுண்டல் செய்வோமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

பச்சை அவரை சுண்டல்:

பச்சை அவரை ஒரு கப் 

தேங்காய் துருவல் 2 ஸ்பூன் 

பச்சை மிளகாய் 2 

சீரகம் 1/2ஸ்பூன் 

தனியா பொடி 1 ஸ்பூன் 

உப்பு தேவையானது

பெருங்காயத்தூள் சிறிது

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

பச்சை அவரையை சுத்தம் செய்து உப்பு சேர்த்து வேகவிடவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் வெந்த அவரையை நீரை வடிகட்டி சேர்த்துக் கிளறவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து சுண்டலில் போட்டு தனியா பொடியையும் சேர்த்துக் கிளற சத்தான ருசியான பச்சை அவரை சுண்டல் தயார்.

கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல்:

கடலைப்பருப்பு ஒரு கப் 

வெல்லம் அரை கப் 

ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன்

தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

கடலைப்பருப்பை வாணலியில் சூடு வர வறுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குழையாமல் மலர வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தை கரைத்து கல்மண் போக வடிகட்டி கொதிக்க விடவும். வெல்லப்பாகு சிறிது கெட்டியானதும் அதில் வெந்த கடலைப்பருப்பை சேர்த்து ஏலப்பொடி, தேங்காய் துருவல் போட்டு கலந்து இறக்கவும். மிகவும் ருசியான கடலைப்பருப்பு, இனிப்பு சுண்டல் தயார்.

பட்டர் பீன்ஸ் சுண்டல்:

பட்டர் பீன்ஸ் உரித்தது ஒரு கப் 

உப்பு தேவையானது 

தேங்காய் துருவல் 2 ஸ்பூன் 

இஞ்சித் துருவல் ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் 2

தாளிக்க: கடுகு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள்

உரித்த பட்டர் பீன்ஸை உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய் துருவல் பச்சை மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் வெந்த பட்டர் பீன்ஸ், பெருங்காயத்தூள், இஞ்சித் துருவல், அரைத்து வைத்த தேங்காய் துருவல் சேர்த்து கலந்துவிட மிகவும் ருசியான பட்டர் பீன்ஸ் சுண்டல் தயார்.

கிரிப்டோவில் முதலீடு செய்வது சரியான யுக்தியா?

தண்ணீர் குடிப்பதற்கு இத்தனை விதிமுறைகளா? இது தெரியாம போச்சே!

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

SCROLL FOR NEXT