Variety Snacks... 
உணவு / சமையல்

சத்தான முறுக்கு வகைகள்!

ராதா ரமேஷ்

ப்போதும் ஒரே மாதிரியாக அரிசிமாவில் முறுக்கு செய்து செய்வதைத்  தாண்டி  பல்வேறு தானியங்களை பயன்படுத்தி செய்யலாம் சத்து நிறைந்த முறுக்கு வகைகள்!

 தினை அரிசி முறுக்கு:

 தேவையான பொருட்கள்:

 தினை அரிசி மாவு -1கப் 

 பொட்டுக்கடலை மாவு -1கப் 

 எள்-2 டேபிள்ஸ்பூன் 

 சீரகம்-1/2 டேபிள்ஸ்பூன் 

 வெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன் 

 உப்பு- தேவையான அளவு

எண்ணெய் - பொரித்தெடுக்க 

 செய்முறை:

இரண்டு கப் தினை அரிசியை நன்கு தண்ணீரில் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் அதனை வடிகட்டி நிழலில் உலர வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை நன்கு சலித்து ஒரு கப் தினை அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். அதனோடு பொட்டுக் கடலை மாவு, சீரகம், எள், உருக்கிய வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானவுடன்  பிசைந்து வைத்த முறுக்கு மாவினை ஒரு முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து விட்டு வேக வைத்து எடுத்தால் சத்து நிறைந்த திணை அரிசி முறுக்கு ரெடி!

கருப்பு கவுனி அரிசி முறுக்கு:

தேவையான பொருள்கள்:

 கருப்பு கவுனி அரிசி மாவு-1 கப் 

 பொட்டுக்கடலை மாவு -1/2 கப் 

எள் -2 டேபிள்ஸ்பூன் 

 வெண்ணைய் -3 டேபிள்ஸ்பூன் 

 உப்பு- தேவையான அளவு

 எண்ணெய் - பொரித்தெடுக்க 

 செய்முறை:

2 கப் கருப்பு கவுனி அரிசியை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின்  வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து மாவை நன்கு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் 1கப் கருப்பு கவுனி அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, எள், உருக்கிய வெண்ணெய்  தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்  விட்டு எண்ணெய்  நன்கு சூடானவுடன் கலந்து வைத்த முறுக்கு மாவினை முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து வேக வைத்து எடுத்தால் சுவையான சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி முறுக்கு ரெடி!

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டங்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே சத்து நிறைந்த இந்த வகை முறுக்கு வகைகளை செய்து கொடுக்கலாம்!

‘டைட்டில் வேணுமா? என்கிட்ட வாங்க’ - ஜெயம் ரவி!

உண்மையான புகழ்ச்சி என்பது எது தெரியுமா?

கங்கா தேவி யாரிடம் வரம் கேட்டாள் தெரியுமா?

நிதானமான வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை! 

உள்ளம் உயர ஞானம் உயரும். சர்வம் சக்தி மயம் விளக்கிய ஸ்ரீராமகிருஷ்ணர்!

SCROLL FOR NEXT