சீரக ஜீரண சாதம்! 
உணவு / சமையல்

குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான சத்தான டிபன் பாக்ஸ் ரெசிபிகள்!

கல்கி டெஸ்க்

சீரக ஜீரண சாதம்!

தேவையானவை;

புழுங்கல் அரிசி - 1 கப்

துவரம்பருப்பு - 1/2 கப்

மிளகு, சீரகம் - தலா 1 டேபிள் ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு- தலா 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 5

உப்பு - தேவைக்கு

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை;

ஒரு குக்கரில் அரிசி, பருப்பு கழுவி வேக விட்டு வடிக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மிளகு, சீரகம் பொரித்து எடுத்து பொடியாக்கவும்.

வடித்த சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு ஆறவிடவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் போடவும். பொறித்த, மிளகு, சீரகப், உப்பு, சேர்த்து பொடிக்கவும். பொடித்த பொடி, மஞ்சள் தூள் சாதத்தில் சேர்த்து நன்கு கிளறி விடவும். சுவையான சத்தான ஆரோக்கிய ஜீரண சீரக சாதம் தயார்.

அங்காயப் பொடி சாதம்!

அங்காயப் பொடி சாதம்!

தேவையானவை;

பச்சரிசி - 2 கப், சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல், தனியா, வேப்பம்பூ, சுக்குப் பொடி, ஓமம், சீரகம், மிளகு - தலா 1 டேபிள் ஸ்பூன் (வறுத்து உப்பு சேர்த்து)  தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - சிறிது கறிவேப்பிலை – சிறிது

செய்முறை;

பச்சரிசியை உதிராக வடிக்கவும்.பின் தட்டில் ஆற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு போட்டு தாளித்து அதில் பொடித்த பொடியை கலந்து கிளறி இறக்கவும்.

இது வயிற்றை  இதமாக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கும். இரத்த ஓட்டத்தை இயல்பாக்கி சுறு சுறுப்பாக்கும்.

திரிகடுக சாதம்!

திரிகடுக சாதம்

தேவையானவை;

வடித்த சாதம் - 1 கப்

சுக்கு- 1 துண்டு

வெள்ளை மிளகு - 2 டீஸ்பூன்

திப்பிலி - 1/4 டீஸ்பூன்

பூண்டு பல் - 5

கறிவேப்பிலை - சிறிது

வெள்ளை வெங்காயம் - 1

மஞ்சள் தூள்- சிறிது

உப்பு –தேவைக்கு

செய்முறை:

ஒரு வாணலியில் சுக்கு, வெள்ளை மிளகு, திப்பிலி, கறிவேப்பிலை வறுத்து பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இதில்  அரைத்த பொடியைே சேர்த்து, பூண்டு சேர்த்து வதக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வாசனை போகும் வரை வதக்கவும். சாதத்தை இதில் சேர்த்து கிளறி இறக்கவும். வாரம் ஒரு முறை இதனை சாப்பிட அஜீரணக் கோளாறுகள் வராது. சத்தானது. எதிர்ப்பு சக்தி நிறைந்தது. பனிக்காலத்தில் சாப்பிட ஏற்றது.

-வசந்தா மாரிமுத்து

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT