இந்தியாவின் ஒரு மாநிலத்தின் புகழ்பெற்ற நட்ஸ்தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்ததாகும். பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், ஆயிரக் கணக்கில் விலை இருக்கும் இந்த நட்ஸின் சில தகவல்களைப் பற்றி பார்ப்போம்.
காய்கறி, பழங்களில் இருக்கும் அதே அளவு சத்துக்கள் நட்ஸ்களிலும் இருப்பதனால் அதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவரும் மாலைநேரத்தில் ஒரு உணவாகவே எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இவை அனைத்திலும் பொதுவான முறையில் சத்துக்கள் என்பது இருந்தாலும் கூட, ஒவ்வொரு உலர் உணவு பொருட்களும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு தான் காணப்படுகிறது. அதோடு மட்டும் இல்லாமல் அதனுடைய பிறப்பிடம் முதல் மற்ற அனைத்துமே மாறுபடுகிறது.
அந்தவகையில் இந்தியாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் விளையும் இந்த உலர் பழத்தின் பெயர் பைன் நட்ஸ். பைன் நட்ஸ் ஒரு கிலோ விலை ரூ8 ஆயிரம் ஆகும்.
பைன் நட்ஸில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. இது நீளமான வடிவத்தை கொண்ட ஒரு நட்ஸ் ஆகும். பைன் நட்ஸ் முதலில் பயிரிடப் படாமல் காடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டன. இதில் கிட்ட தட்ட 30 வகைகள் இருந்தாலும், நான்கு வகைகள் மட்டுமே பொதுவாக உண்ணப்படுவதாக சொல்லப்படுகிறது. இவை சைபீரியன் பைன், லேஸ்பார்க் பைன், சீன வெள்ளை பைன், சைபீரியன் குள்ள பைன் ஆகிய நான்கு வகைகள் மிகவும் பிரபலமானவை.
சில்கோசா பைன் மற்றும் கொரியன் பைன் இவை இரண்டும் மேற்கு இமயமலை மற்றும் வடகிழக்கு ஆசியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே பைன் கூம்பின் சுற்றுச்சூழல் காலநிலையினை பொறுத்தே அதனுடைய அறுவைடையாக இருந்தாலும் சரி, உற்பத்தி அளவாக இருந்தாலும் சரி நன்றாக அமையும். மேலும் இதற்கு ஓரளவு சூரிய வெளிச்சம் தேவைப்படுகிறது. அதேபோல் பைன் நட்ஸ்கள் மரத்தில் இருந்து கிடைக்கக்கூடியவை.
நன்மைகள்:
பைன் நட்ஸில் பினோலெனிக் அமிலம் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலம் காணப்படுகிறது. ஆகவே இத்தகைய சத்துக்கள் நிறைந்த இந்த நட்ஸை சாப்பிடுவதன் மூலம், உடல் எடை குறையும்.
அதேபோல் இதில் கார்போஹைட்ரேட் இருப்பதனால், இதனை நாம் சாப்பிடுவதன் மூலமாக உடலில் காணப்படும் இரத்த சர்க்கரையின் அளவானது படிப்படியாக குறைய தொடங்கும்.
பைன் நட்ஸில் 10 முதல் 34 சதவீதம் புரதம் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ மற்றும் லுடீன் நிறைந்துள்ளன. இவை இரண்டும் கண்கள் ஆரோக்கியத்திற்கு உதவுவதாக அறியப்படுகிறது.
மேலும் இவை சாப்பிடுவதால் பசி கட்டுப்படுத்தப்படுகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது. ஆகையால், உடல் எடை குறையவும் இது காரணமாகிறது.