பூரி எல்லோருக்கும் பிடிக்கும் சிற்றுண்டி. அது மேலும் சுவைக்க சில யோசனைகள்:
மாவு பிசைந்தவுடன் பூரி தேய்த்து பொரித்தால் எண்ணெய் குடிக்காது. உப்பியும் வரும்.
பூரி தேய்க்கும் போது கையில் மாவுக்கு பதிலாக வெண்ணெய் தொட்டு கொண்டால் பூரி எண்ணெய் குடிக்காது. சுவையும் மணமும் கூடும் எண்ணெய் கசடும் ஆகாது.
மாவை பிசைந்து, பத்து நிமிடங்கள் ஃ பிரிட்ஜில் வைத்து எடுத்து, பூரி தேய்த்து எடுத்தால் எண்ணெய் செலவு குறையும், உடம்புக்கும் நல்லது.
கோதுமை மாவில் சிறிது வெந்த உருளைக்கிழங்கு மசித்துச் சேர்த்தால், சுவை கூடும்.
கோதுமை மாவில் சிறிது நெய் கலந்து, வெதுவெதுப்பான வெந்நீரையும் சேர்த்து, பிசைந்தால் பூரி உப்பலாக வரும், நெய்வாசனையும் சேரும்.
ஒரு கப் மாவுக்கு ஒரு ஸ்பூன் வறுத்த ரவை கலந்து பிசைந்தால், பூரி மொறுமொறுப்பாக இருக்கும்.
மாவில் சிறிது பால் கலந்து பிசைந்தால், மென்மையாக, சுவையாக இருக்கும்.
பூரி மாவில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு கலந்து பிசைந்தால் செம டேஸ்டியா இருக்கும்.
மாவு பிசையும்போது அரை ஸ்பூன் சர்க்கரை கலந்து பாருங்க, பூரி சும்மா மென்மையாகவும், சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் வரும்.