முஹாலேபி... youtube.com
உணவு / சமையல்

ரமலான் ஸ்பெஷல் ‘முஹாலேபி’ டசர்ட் வீட்டிலேயே செய்யலாமே!

நான்சி மலர்

முஹாலேபி கிழக்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல், துருக்கி போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமான இனிப்பு வகையாகும். இதை ரமலான் போன்ற விஷேசத்திற்கு இங்கு செய்வார்கள். முஹாலேபி மிகவும் சுவையாகவும், க்ரீமியாகவும் இருக்கும் டசர்ட்டாகும். இதை செய்வதும் மிகவும் சுலபம். சரி வாங்க முஹாலேபியை வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

முஹாலேபி செய்ய தேவையான பொருட்கள்:

பால்-1/2லிட்டர்.

சோளமாவு-3 தேக்கரண்டி.

சக்கரை-4 தேக்கரண்டி.

பிரஷ் கிரீம்-200 கிராம்.

ரோஸ் எசன்ஸ்-1/4 தேக்கரண்டி.

ரோஸ் சிரப்- தேவையான அளவு.

பிஸ்தா- தேவையான அளவு

முஹாலேபி செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு குட்டி பவுலில் 3 தேக்கரண்டி சேளமாவை எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து வைத்து விடவும்.

பிறகு கடாயில் ½ லிட்டர் பாலை காய்ச்சவும். பால் சற்று கொதித்ததும் 4 தேக்கரண்டி சக்கரை சேர்த்து கிண்டவும். அடுத்து அதில் 200 கிராம் பிரஷ் கிரீமை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு இப்போ எல்லாவற்றையும் நன்றாக கலந்து விடவும். கடைசியாக கரைத்து வைத்த சோளமாவை ஊற்றவும். சோளமாவை சேர்த்ததும் பால் கெட்டியாக தொடங்கும். பாலை கைவிடாது நன்றாக கிண்டவும். பால் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி ¼ தேக்கரண்டி ரோஸ் எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.

இப்போது முஹாலேபி மிக்ஸர் ரெடி. இரண்டு கண்ணாடி கிளேஸை எடுத்து அதில் செய்து வைத்திருக்கும் முஹாலேபியை ஊற்றவும். பிறகு அதை பிரிட்ஜில் 4 மணி நேரம் வைத்து எடுக்கவும். முஹாலேபியை பரிமாறும் போது, அதன் மீது ரோஸ் சிரப் ஊற்றி, பாதாம் தூவி பரிமாறவும். இப்போது சுவையான முஹாலேபி தயார். கண்டிப்பாக வீட்டில் செய்து பாருங்கள்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT