உணவு / சமையல்

சாமை புதினா ரைஸும், பனி வரகு தேன் சாதமும்!

மகாலட்சுமி சுப்பிரமணியன்

சாமை புதினா ரைஸ்!

தேவையானவை :

சாமை அரிசி : 1கப்,

புதினா : அரை கப்,

ப. மிளகாய் : 2,

முந்திரி, உடைத்தது : கால் கப்

நெய் : 1/4 கப்,

தாளிக்க :

பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை : தலா இரண்டு

உப்பு.

செய்முறை :

சாமை அரிசியை குழையாமல் வேக வைத்து சற்று ஆறவிடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு புதினா இலைகளை வதக்கி ஆறியதும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும்.

பின் வாணலியில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிந்ததும் அதனுடன் ப. மிளகாய், முந்திரி சேர்த்து வதக்கவும்.

பிறகு புதினா சாறு ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் சாமை சாதத்தை சேர்த்து கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கி சூடாக பச்சடியுடன்பரிமாறவும்.

--------------

பனி வரகு தேன் சாதம்!

தேவையானவை :

பனிவரகு : ஒரு கப்,

பால் : 1 கப்,

தேன் : 2 டேபிள்ஸ்பூன்,

பனங்கற்கண்டு : இரண்டு டீஸ்பூன்.

செய்முறை :

பனி வரகு தானியத்தை கழுவி பின் தண்ணீர் விட்டு வேக விடவும். பாதி வெந்ததும் பால் சேர்த்து நன்கு வேக விடவும்.

இது சற்று ஆறியதும் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து சாப்பிடும் போது, தேன் விட்டு சாப்பிட, சுவையில் அருமையாக இருக்கும்.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

மகாராஷ்திராவின் பெருமையாகக் கருதப்படும் Puneri pagadi தலைப்பாகை!

SCROLL FOR NEXT