kuzhambu vakaigal... 
உணவு / சமையல்

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

வரமிளகாய் வத்த குழம்பு:

தனியா 2 ஸ்பூன் 

மிளகாய் வத்தல் 10 (அ) 12

சீரகம் 1/2 ஸ்பூன்

வெந்தயம் 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் 

கறிவேப்பிலை சிறிது

உப்பு தேவையானது

புளி எலுமிச்சை அளவு

வெங்காயம் 2 

தக்காளி 1 

பூண்டு 10 பற்கள் 

நல்லெண்ணெய் 1/4 கப்

தாளிக்க: கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு தனியா, மிளகாய், சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு சிவக்க  வறுக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு பற்களை சேர்த்து வெங்காயம் கண்ணாடி போல் நிறம் மாறி வரும் வரை வறுக்கவும். இப்பொழுது உப்பு,  மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மத்து அல்லது கனமான கரண்டி கொண்டு நன்கு மசிக்கவும்.புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு கரைத்து அதில் விட்டு புளி வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும். ஐந்தே நிமிடத்தில் சுருண்டு வர ஆரம்பிக்கும். ஒரு துண்டு வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். வாணலியில் கடுகு, கருவேப்பிலை, சீரகம், வெந்தயம் தாளித்து தயாராக உள்ள வரமிளகாய் வத்தக்குழம்பில் கொட்டிக் கிளறவும். மணமான, ருசியான வரமிளகாய் வத்த குழம்பு தயார். இதனை சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட "ஆஹா அமிர்தம்" என்று பாராட்டுவார்கள்.

இந்த வத்த குழம்பு செய்ய சாம்பார் பொடியோ மிளகாய்த்தூளோ எதுவும் தேவையில்லை.

ஸ்பைசி தொண்டக்காய் வறுவல்:

 தொண்டக்காய் 1/4 கிலோ

மிளகாய் தூள் 1 ஸ்பூன் 

தனியா தூள் 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் 

பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

ஆம்சூர் பவுடர் 1 ஸ்பூன்

உப்பு தேவையானது 

கறிவேப்பிலை சிறிது

அரிசி மாவு 2 ஸ்பூன்

எண்ணெய் பொரிக்க

தொண்டக்காயை (கோவக்காய்) கழுவி நீளவாக்கில் நறுக்கி அரிசி மாவு, உப்பு சேர்த்து பிசிறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் வைத்து சூடானதும் பிசிறி வைத்துள்ள தொண்டக்காய் துண்டுகளைப் போட்டு பொரித்தெடுக்கவும். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, கறிவேப்பிலை, சீரகம் தாளித்து அதில் பொரித்த தொண்டக்காய்களை போட்டு மிளகாய் தூள், தனியாத் தூள், ஆம்சூர் பவுடர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், தேவைப்பட்டால் சிறிது உப்பும் சேர்த்து வதக்கவும். மிகவும் கிரிஸ்பியான தொண்டக்காய் பொரியல் தயார்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT