Traditional Recipes Image credit - youtube.com
உணவு / சமையல்

சட்டுனு செய்ய சுவையான பாரம்பரிய சமையல்!

சேலம் சுபா

ன்னதான் வெளிநாட்டு உணவுகளை விரும்பினாலும் நம்ம பாட்டி செய்து தந்த சில ரெசிபிகளை இன்றும் வீடுகளில் விரும்பி கேட்டு செய்வார்கள். அப்படி செய்யப்படும் சில பாரம்பரிய ரெசிபிகள் இங்கு…

கத்திரிக்காய் ரசவாங்கி

தேவை:
கத்திரிக்காய் - 1/4கிலோ
துவரம் பருப்பு - 1 கப்
புளி - நெல்லிக்காய் அளவு கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிட்டிகை
கருவேப்பிலை-  தாளிக்க
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள்-  ஒரு சிட்டிகை
வறுத்து அரைக்க
தனியா - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4


செய்முறை;

கத்திரிக்காயை பொடியாக நறுக்கி துவரம் பருப்பு கடலை பருப்புகளை கழுவி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேக விட்டு அதிலேயே கத்திரிக்காயை பொடியாக நறுக்கி வேகவிடவும்.வறுத்து அரைத்து கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வாசம் வர வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, 'கருவேப்பிலை, பெருங்காயம் போட்டுத் தாளித்து புளிக் கரைசலை ஊற்றி  உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும். பின்னர் அரைத்த விழுது, வேக வைத்த கத்திரிக்காய் பருப்பு கலவை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் .சாதத்துடன் பிசைந்து சாப்பிட ஏற்றது இந்த ரசவாங்கி.

கோசுமல்லி

தேவை;
வெள்ளரிக்காய் - 1
பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - சிறிது
இஞ்சி துருவல் - சிறிது 
கடுகு - தாளிக்க
எண்ணெய் - தேவைக்கு
கொத்தமல்லி தலை-  சிறிதளவு
உப்பு – தேவைக்கு

செய்முறை:

வெள்ளரிக்காயை  கழுவி தோலுடன் துருவிக் கொள்ளவும். பாசிப்பருப்பை ஊறவைத்து தண்ணீரை வடித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் துருவிய வெள்ளரிக்காய், ஊறிய பாசிப்பருப்பு, எலுமிச்சைசாறு, தேங்காய் துருவல், இஞ்சி துருவல் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு தாளித்து வெள்ளரிக்காய் கலவையில் சேர்த்து மேலே நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். இது குழந்தைகளுக்கு அப்படியே சாப்பிட ஏற்ற சத்துள்ள ஒரு ஸ்நாக்ஸ் ஐட்டம் ஆகும்.

புடலை கடலை உசிலி
தேவை:

புடலங்காய் - 1 மீடியம் சைஸ்
வேர்க்கடலை - 3 டீஸ்பூன்
பொட்டுகடலை - 3 டீஸ்பூன்
காய்ந்த வர மிளகாய்-  4 கடுகு பெருங்காயம் - தாளிக்க
எண்ணெய்-  தேவை
உப்பு - தேவைக்கு


செய்முறை;

புடலங்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வேர்க்கடலை, பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில்  ஒன்றிரண்டாக பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு பெருங்காயம் தாளித்து நறுக்கிய புடலையை சேர்த்து வதக்கவும். பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து  உப்பு சேர்த்து வேக விடவும். தண்ணீர் நன்றாக வற்றியதும் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி இறக்கவும் இந்த உசிலி சூடான சாதத்துக்கு சூப்பராக இருக்கும்.

சிறுவர் சிறுகதை; முல்லாவின் தந்திரம்!

நாம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களில் 40,000-க்கும் அதிகமான பாக்டீரியாக்கள் உள்ளனவாம்! சுத்தம் செய்வது எப்படி?

விருச்சிக வியூகத்தை மனதில் ஏற்றால் வேலை கிடைக்காமல் போகாது!

ஆரோக்கியமான கலவை சத்துமாவு ஈஸியா தயாரிப்பது எப்படி?

நமக்கு என்னவோ அதையே ஏற்போம்!

SCROLL FOR NEXT