உணவு / சமையல்

சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்...

பி.பாரதி

* திப்பிலியுடன், சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.

* தயிரும், கீரையும் ஒரே சமயத்தில் சாப்பிட்டால், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும்.

* தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக் கூடாது.

* தேன் சாப்பிட்ட பிறகு இனிப்பு உணவு சாப்பிடக் கூடாது. இதனால் சுவாசக் கோளாறுகள் உண்டாகக் கூடும்.

* வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

* எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற புளிப்பான பழங்களை சாப்பிட்டவுடன் பால் குடித்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.

* முருங்கை, முள்ளங்கி உணவுகளை சாப்பிட்ட பின் பால் அருந்தக் கூடாது.

* பசலைக் கீரை மற்றும் எள் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

* வாழைக்காயும், கத்தரிக்காயும் ஒரே சமயத்தில் உட்கொண்டால், வாந்தி வருவது போல் உணர்வு ஏற்படும்.

* வாழைப் பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக் கூடாது.

* துளசிச் சாறு அருந்திய அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் குடிக்க கூடாது.

* கோதுமையை, நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக் கூடாது.

* மாத்திரைகள் உட்கொண்டு அடுத்த இரண்டு மணி நேரம் காஃபி குடிக்கக் கூடாது. காஃபி, மருந்தின் தன்மையை முறித்து விடும்.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT