Healthy snacks 
உணவு / சமையல்

சத்தான நெல்லிக்காய் பாத், சுவையான வெஜிடபிள் வடை செய்வோமா?

எஸ்.மாரிமுத்து

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் - 6

துருவிய தேங்காய் - 4 டீஸ்பூன்

உதிராக வடித்த சாதம் - 2 கப்

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன்

வர மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 1

கடலைப்பருப்பு-1 டீஸ்பூன

உளுத்தம் பருப்பு-1 டீஸ்பூன்

பெருங்காயம் - 1 சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிது

மல்லித்தழை - சிறிது

செய்முறை:

நெல்லிக்காயை விதை எடுத்து விட்டு துருவவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, நெல்லித் துருவலையும் , பச்சை வாசனை போக வதக்கவும். 

பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் மல்லித் தழை தூவி பரிமாறவும். சுவையான ஆரோக்கியமான நெல்லிக்காய் பாத் ரெடி.

வெஜிடபிள் வடை

தேவையான பொருட்கள்:

வெள்ளை உளுந்து - 2 கப்

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 3

பொடித்த மிளகு - 1 டீஸ்பூன்

நறுக்கிய முட்டைக்கோஸ் - 14 கப்

துருவிய கேரட் - 2 டீஸ்பூன்

துருவிய இஞ்சி - சிறிது

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

மூன்று பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊற விட்டு, ஊறியதும் நீரை வடிகட்டி உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கெட்டியாக அரைக்கவும்.

காய்கறிகள், கறிவேப்பிலை, மல்லி தழை சேர்த்து, மிளகுத் தூள் சேர்த்து மாவில் கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவினை உருண்டையாக தட்டி ஓட்டை போட்டு வடைகளாக தட்டி போட்டு இருபுறமும் வெந்ததும் திருப்பி எடுக்கவும்.

சுவையான ஆரோக்கியமான சிற்றுண்டி வெஜிடபிள் வடை. சுடச்சுட சாப்பிட ஜோராக இருக்கும்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT