Sweet potato Gir. 
உணவு / சமையல்

சுவையான Sweet Potato Kheer செய்யலாம் வாங்க!

கிரி கணபதி

துவரை நீங்கள் பாதாம் கிர், கேரட் கிர், பீட்ரூட் கிர், சேமியா கார், ரவை கிர் போன்றவற்றை தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஸ்வீட் பொட்டேட்டோ எனப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வைத்து செய்யப்படும் கீர் மிகவும் சுவையாக இருக்கும். அதில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருப்பதால், மேலும் அதில் பாதாம் முந்திரி எல்லாம் சேர்த்து செய்யும்போது சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். 

இனிப்பு சுவை தரும் அனைத்துமே நம் நாவை நடனமாட வைக்கும். இந்த ஸ்வீட் பொட்டேட்டோ கிர்ரும் இனிப்பு சுவையை வெளிப்படுத்துவதால், அனைவருமே இதை விரும்பிக் குடிப்பார்கள். அதுமட்டுமின்றி, இதில் ஆரோக்கிய நன்மைகளும் அதிகம் உள்ளது. ஏராளமான ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளதால் இதை தாராளமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவைக்கலாம். 

தேவையான பொருட்கள்: 

  • சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2

  • பால் - ½ கப்

  • சர்க்கரை - ½ கப்

  • ஏலக்காய் - 3

  • முந்திரி - 10

  • பாதாம் - 10

  • நெய் - 2 ஸ்பூன்

செய்முறை: 

முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாகக் கழுவி அதன் தோலை நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும். 

பின்னர் ஒரு சிறிய அளவு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை நன்றாகக் காய்ச்சிக் கொள்ளவும். 

அடுத்ததாக ஏலக்காய், முந்திரி, பாதாம் போன்றவற்றை நெயில் நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும். 

பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, நெய் விட்டு சர்க்கரைவள்ளிக் கிழங்கு துருவலை நன்றாக வதக்கிய பிறகு, அதில் பால் சேர்த்து 3 முதல் 4 விசில் வரை வேக விடவும். 

அதன் பிறகு கிழங்கு நன்றாக வெந்ததும், அதை மசித்து தேவையான அளவு சர்க்கரை, நெய், வறுத்தெடுத்த முந்திரி, பாதாம், ஏலக்காய் மேலும் கூடுதலாக கொஞ்சம் பால் சேர்த்து இரண்டு நிமிடம் வரை கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கிர் தயார்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT