samayal tips 
உணவு / சமையல்

தீபாவளி பலகாரம் செரிக்க தனியாப் பொடியும், வெந்தய சட்னியும்!

சேலம் சுபா

தீபாவளிக்கு எண்ணெய் பலகாரங்களும் இனிப்பு வகைகளும் உண்டு மகிழ்ந்து கொண்டிருப்பீர்கள். கூடவே வயிறு செரிமானமின்றி  உப்புசம்  என்ற அவஸ்தைகளும் இருக்கும். இந்த பாதிப்புகளை அகற்றி உடல் நலம் தரும் இரண்டு ரெசிபிகளை இங்கே பார்ப்போம்.

தனியா பொடி சாதம்
தேவை - அரிசி ஒரு கப்
தனியா - ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு -ஒரு டீஸ்பூன்
வரமிளகாய்- ஆறு
புளி-  சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் மஞ்சள் தூள் - சிறிது

செய்முறை:
ஒரு கடாயில்  தனியா  கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து ஆறியதும், புளி உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும். பச்சரிசி அல்லது சாப்பாட்டு புழுங்கல் அரிசியை நன்கு களைந்து  சிட்டிகை உப்பு சேர்த்து உதிரி உதிராக வடிக்கும் அளவுக்கு வேகவைத்து ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும். அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு பெருங்காயம் மஞ்சள் தூள் கருவேப்பிலை போட்டு தாளித்து சாதத்தில் கொட்டி வறுத்துப் பொடித்த தனியா கலவையையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கி பரிமாறுவோம். தனியா உடல் நலனுக்கு மிகவும் உகந்ததுடன் வயிற்றில் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு உதவும் இந்த சாதம் உணவும் உதவும். இதே முறையில் மிளகு, சீரகம் போன்றவற்றையும் தனியாவிற்கு பதில் உபயோகித்து செய்யலாம்.

வெந்தய சட்னி;
தேவை வெந்தயம் : ஒரு டீஸ்பூன்
வர மிளகாய் - 6
பெருங்காயத்தூள் -சிட்டிகை
வெல்லம்- சிறிதளவு
புளி- சிறிய எலுமிச்சை அளவு
உப்பு தேவையான அளவு
கடுகு கடலை பருப்பு உளுந்து - தலா 1டீ ஸ்பூன் , கருவேப்பிலை சிறிது, எண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை:
ஒரு கடாயில் சிறிது எண்ணெய்விட்டு வெந்தயம், வரமிளகாய் பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து சிவக்க வறுத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி ஊறவைத்த புளி, வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்கவும். தாளிக்கும் கண்டியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, கல்லப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டி கலக்கவும். இது சூடான சோற்றுக்கு ருசி சேர்க்கும். வெந்தயம் அகத்தை சீராக்கி மனதை மகிழவைக்கும் உடல் நலத்துக்கு உகந்தது என்பதை அறிவோம் சாதத்துக்கு போட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT