உணவு / சமையல்

டேஸ்டி ரெசிபிஸ்!

கல்கி டெஸ்க்

கேரட் கீர் கதம்

தேவையான பொருட்கள்:  துருவிய கேரட் - 300 கி, ஊற வைத்த உளுத்தம் பருப்பு - 150 கி, ஊற வைத்த பச்சரிசி - 3 டீஸ்பூன், பால் பவுடர் - 50 கி, பால் -  250 மி.லி,  கோவா - 100 கி, சர்க்கரை - 400 கி, எண்ணெய் - பொரிக்க, கேசரி பவுடர், உப்பு -  தேவைக்கு.

செய்முறை: அரிசி, பருப்பை மைய அரைக்கவும். துருவிய கேரட்டை பாலில் வேக வைத்து,  அதனுடன் பால் பவுடர், 50 கி. கோவா, சர்க்கரை 250 கி. சேர்த்துக் கிளறவும். அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, சிறு உருண்டைகள் செய்யவும்.

மீதி சர்க்கரையில் பாகு எடுக்கவும் அரைத்த மாவில் சிட்டிகை உப்பு  சேர்த்து,   கேரட் உருண்டைகளை மாவில்  தோய்த்தெடுத்து எண்ணெயில் பொரிக்கவும். பொரித்தவுடன் சர்க்கரைப் பாகில் போட்டு ஐந்து நிமிடங்கள் ஊற விட்டு எடுக்கவும்.

அலங்கரிக்க: மீதமுள்ள கோவாவை உதிர்த்து சிறிது  கேசரி பவுடர் கலந்து, உருண்டைகளை  கோவாவில் புரட்டவும்.  இது பார்ப்பதற்கு அழகாகவும், ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும்.  

கறிவேப்பிலைக் குழம்பு

தேவையான பொருட்கள்: புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, நறுக்கிய சிறிய வெங்காயம் - 10, நறுக்கிய பூண்டு - 4, கடுகு, நல்லெண்ணெய் - தாளிக்க, கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு.

வறுத்த அரைக்க: கசகசா, மல்லித்தூள் - தலா 1 டீஸ்பூன், பச்சரிசி, சோம்பு, மிளகு, சீரகம் - தலா  1/2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1.

செய்முறை: வறுக்க வேண்டிய பொருட்களை வறுத்து பின் கறிவேப்பிலையையும் வதக்கிச் சேர்த்து புளியுடன் விழுதாக அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் காய்ந்ததும், கடுகை வெடிக்கவிட்டு, நறுக்கிய வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கவும். வதங்கியதும், உப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து குழம்பு நன்றாகக் கொதித்தவுடன் இறக்கவும்.

சுவையான சத்துமிக்க கறிவேப்பிலைக் குழம்பு தயார்.

மூடி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய பலாப்பழம் - 2 கப், ஊற வைத்த புழுங்கல் அரிசி, ஊறவைத்த பச்சரிசி, துருவிய தேங்காய் தலா - 1 கப், வெல்லம் - 11/2  கப்.

செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசியை பொடியாக ரவைபோல் அரைக்கவும். அதனுடன்  தேங்காய், வெல்லம், பலாப்பழத்தைச் சேர்த்து சேசாக அரைத்துக் கொள்ளவும். மாவுக் கலவையை உப்புமாபோல் கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். இதை சிறு சிறு கொழுக்கட்டைகளாக உருட்டி, சிறிதாக கட் செய்யப்பட்ட வாழையிலையில் வைத்து மூடி ஆவியில் வேக வைக்கவும்.

இது பலாப்பழ வாசனையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

டைப் A மற்றும் டைப் B இரண்டும் கலந்த ஆளுமைத்தன்மை உள்ளவர்களின் சிறப்பியல்புகள்!

SCROLL FOR NEXT