Sarvapindi recipe in tamil 
உணவு / சமையல்

இது என்னது, வித்தியாசமான ரெசிபியா இருக்கே? ஆனா செம டேஸ்ட்! 

கிரி கணபதி

தெலுங்கானாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான சர்வ பிண்டி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். தெலுங்கு மொழியில் ‘சர்வ’ என்றால் ஆழமான பானை என்றும், ‘பிண்டி’ என்றால் அப்பம் என்றும் பொருள். அதாவது ஆழமான பானையில் தயாரிக்கப்படும் ஒருவகை அப்பம் என்பதே சர்வ பிண்டியின் பொருள். இந்த சுவையான உணவு தெலுங்கானாவின் கிராமப்புறங்களில் பெரும்பாலும் காலை உணவாகவோ அல்லது சிற்றுண்டியாகவோ பரிமாறப்படுகிறது. 

சர்வ பிண்டி அரிசி மாவு, வேர்க்கடலை மற்றும் சில மசாலா பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதன் தயாரிப்பு முறை மிகவும் எளிமையானது என்றாலும், ஒவ்வொரு குடும்பத்திலும் சர்வ பிண்டியை தயாரிக்கும் முறை சற்று வேறுபடும். இதன் சுவை இதில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் மற்றும் தயாரிப்பு முறையைப் பொறுத்து மாறுபடும். 

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு - 2 கப்

  • வேர்க்கடலை - 1/2 கப்

  • வெங்காயம் - 1 (நறுக்கியது)

  • பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)

  • கடுகு - 1 தேக்கரண்டி

  • உளுந்து - 1/2 தேக்கரண்டி

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

  • எண்ணெய் - வறுக்க போதுமான அளவு

செய்முறை:

முதலில் வேர்க்கடலையை நன்கு கழுவி உலர்த்தி, ஒரு வாணலியில் சிவக்க வறுத்த பின்னர், மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, வேர்க்கடலைப் பொடி, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். 

பின்னர், இந்த கலவையில் தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவு பதத்திற்கு பிசைவையும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ளவும். 

இப்போது, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தயார் செய்த வடைகளைப் பொரித்து எடுக்கவும். இறுதியாக வடைகள் அனைத்தையும் ஒன்றாக வைத்து, கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளித்த எண்ணையை அதன் மீது ஊற்றவும். 

அவ்வளவுதான், முற்றிலும் வித்தியாசமான சர்வ பிண்டி தயார். இதை தனியாகவும் சாப்பிடலாம் அல்லது பருப்பு சாதம், புளிக் குழம்பு போன்றவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம். சர்வ பிண்டியுடன் தேங்காய் சட்னி, புதினா சட்னி வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். 

இந்த செய்முறையைப் பின்பற்றி, நீங்களும் வீட்டிலேயே சுவையான சர்வ பிண்டியைத் தயாரித்து, உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.‌

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

SCROLL FOR NEXT