Vadai, Puttu recipes Image credit - youtube.com
உணவு / சமையல்

பாரம்பரிய இனிப்பு உளுந்து வடையும், அவித்த அவல் புட்டும்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ந்த பாரம்பரிய இனிப்பு உளுந்து வடை. வீட்ல ஏதாவது புதுசா பண்ணனும்னு நினைச்சீங்கன்னா இந்த இனிப்பு வடைய ட்ரை பண்ணி பாருங்க. ருசி அசத்தலா இருக்கும்.

 உளுத்தம் பருப்பு 2 கப்

தேங்காய் 1

ஏலக்காய் 6 

நாட்டு சர்க்கரை (அ)

கருப்பட்டி                       1 கப்

கடலை எண்ணெய்

உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் நன்கு ஊற விடவும் தேங்காயை துருவிக் கொள்ளவும் ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும் இப்பொழுது ஊறிய உளுத்தம் பருப்பை களைந்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு ஏலக்காயை தோல் நீக்கி சேர்த்து தண்ணீர் தெளித்து அரைக்கவும். தண்ணீர் அதிகம் தெளிக்க கூடாது காரணம் கடைசியாக நாட்டுச்சர்க்கரை சேர்த்து அரைக்கும் போது மாவு இளகிவிடும். மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய் குடிக்காது. பாதி அரைந்து வரும்போது துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும். நன்கு விழுதாக அரைக்காமல் சிறிது கொரகொரப்பாக அரைந்ததும் நாட்டு சர்க்கரை சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுத்து விடவும்.

வாணலியில் கடலை எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடை ஒட்டாமல் கையிலிருந்து வருவதற்காக கையில்  தண்ணீர் தொட்டுக்கொண்டு மாவை எடுத்து வடை  தட்டி நடுவில் பெரிய ஓட்டை போட்டு எண்ணெய் சட்டியில்

போடவும். இருபுறமும் திருப்பி விட்டு நன்கு பொன் கலரில் சிவந்ததும் எடுத்து விடவும். இது வெளியே  மொறு மொறுப்பாகவும் உள்ளே மிகவும் மிருதுவாகவும் இருக்கும். அசத்தலான சுவையில், சத்தான, இடுப்பு எலும்புகளுக்கு வலு கொடுக்கும் இனிப்பு உளுந்து வடை தயார்.

 குறிப்பு: இந்த வடையை தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுத்தாலும் மிகவும் ருசியாக இருக்கும். நாட்டு சர்க்கரை சேர்ப்பதால் மாவு இளகிவிடும். எனவே தண்ணீர் அதிகம் சேர்க்காமல் தெளித்து அரைக்கவும். நாட்டு சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி சேர்த்து செய்தாலும் ருசி அபாரமாக இருக்கும்.

நாமக்கல், சேலம் பக்கங்களில் இந்த வடையை செய்து அதன் மேல் ஒரு பூவன் வாழைப்பழத்தை உரித்து போட்டு நெய் ஒரு ஸ்பூன், நாட்டு சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்த்து கையால் பிசைந்து சாப்பிடுவார்கள் தேவாமிருதமாக இனிக்கும்.

அவித்த அவல் புட்டு:

சிவப்பு அவல் ஒரு கப் 

நாட்டுச் சர்க்கரை 1/2 கப் 

தேங்காய்த் துருவல் 4 ஸ்பூன் 

ஏலப்பொடி 1/4 ஸ்பூன் 

வறுத்த முந்திரி, திராட்சை 10 

நெய் 2 ஸ்பூன்

அவலை சிறிது நெய்விட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும். பொடித்த அவலுடன் ஃபிரஷ்ஷான தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்து அரை கப் சூடான தண்ணீர் தெளித்து நன்கு பிசிறவும். இதை ஆவியில் ஐந்து நிமிடங்கள் வேகவைத்து எடுத்து சிறிது ஆறிய பின் கையால் உதிர்க்கவும். இதில் நெய் சிறிது, நாட்டு சர்க்கரை கலந்து வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாற மிகவும் சத்தான, ருசியான அவல் புட்டு தயார்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT