10 tips to help maintain the taste of everyday food! 
உணவு / சமையல்

தினமும் உணவின் சுவையைப் பராமரிக்க உதவும் 10 உதவிக் குறிப்புகள்!

கிரி கணபதி

உணவு என்பது நாம் தினசரி உண்ணும் ஒரு பொருள் மட்டுமல்ல, அது நம்முடைய வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய பகுதி. ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்ணும் உணவு சுவையாக இருந்தால் அது நம்முடைய மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். ஆனால், தினமும் ஒரே மாதிரியான உணவை உண்ணும்போது அது சலிப்பை ஏற்படுத்தும். எனவே, தினமும் உணவை சுவையாக மாற்ற உதவும்  சில எளிய குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

உணவை சுவையாக மாற்ற உதவும் 10 குறிப்புகள்: 

  1. உணவு சுவையாக இருப்பதற்கு எப்போதும் ஒரே மாதிரியான காய்கறிகளை மட்டும் பயன்படுத்துவதை விட பல்வேறு வகையான காய்கறிகளை பயன்படுத்துவது நல்லது. இது உணவிற்கு ஒரு புதுவிதமான சுவையைத் தரும். 

  2. மிளகாய் பொடி, கரம் மசாலா, கடுகு வெங்காயம், பூண்டு போன்ற மசாலா பொருட்களை பயன்படுத்தி உணவின் சுவையைக் கூட்டலாம். 

  3. கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை போன்ற மூலிகை இலைகளை பயன்படுத்தி உணவின் நறுமணத்தைக் கூட்ட முடியும். 

  4. வருத்தல், வேகவைத்தல், பொரித்தல், கூட்டு போன்ற பல்வேறு வகையான சமையல் முறைகளைப் பயன்படுத்தி உணவைத் தயாரிக்கவும். 

  5. பொதுவாக பழங்களை சாலட்களில் சேர்த்து சாப்பிடுவது உணவிற்கு நல்ல சுவையைக் கொடுக்கும். 

  6. தயிர் சாதம், மோர் போன்றவற்றை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உணவிற்கு புளிப்பு சுவையும், குளிர்ச்சியும் கிடைக்கும். 

  7. அரிசி, கோதுமை, ராகி, சோளம் போன்ற பல்வேறு வகையான தானியங்களைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கும்போது, தினசரி வித்தியாசமான ஆரோக்கிய உணவுகளை சாப்பிடலாம். 

  8. பருப்பு வகைகளை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து கிடைக்கிறது. இது உணவின் சுவையையும் கூட்டம். 

  9. சமைத்த உணவை அழகாக அலங்கரிப்பது நமது உணவு உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கும். 

  10. தினசரி புதிய உணவு வகைகளை முயற்சி செய்வது, நமக்கு புதிய உணவு சுவைகளை அறிமுகப்படுத்தும். 

மேற்கண்ட குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் நாம் தினமும் உணவை சுவையாக மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் நம்முடைய உடல் நலன் மேம்படுவதுடன், உணவு உண்ணும் நேரம் மிகவும் இனிமையாக இருக்கும். 

இறக்கும் தருவாயில் மக்கள் இந்த 10 விஷயங்களை நினைத்துதான்? 

அரங்கனுக்கே டாக்டரா? யாரப்பா அது?

ஐஸ்கிரீமை கத்தி மற்றும் ஃபோர்க் பயன்படுத்தி சாப்பிடுறாங்களா? எங்கே?

Albinism: இந்த நோய் இவ்வளவு மோசமானதா?

News 5 – (07.10.2024) விமான சாகசம்: ‘பாதுகாப்பில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை’ - தவெக தலைவர் விஜய்!

SCROLL FOR NEXT