உணவு / சமையல்

பாரம்பரிய உணவு : சத்தான காரப்பயிறு!

கல்கி டெஸ்க்

தேவையான பொருட்கள்:

  • பச்சைப் பயறு - 2 கப்

  • வர மிளகாய் - 2

  • கறிவேப்பிலை - சிறிது

  • மிளகு

  • சீரகம் - தலா அரை ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

  • எலுமிச்சம்பழச் சாறு - 1 ஸ்பூன்

  • நெய் - சிறிதளவு

  • எண்ணெய்- வறுப்பதற்கு

செய்முறை:

பச்சைப் பயிரை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். மிளகாய், கருவேப்பிலை, மிளகு, சீரகம் இவற்றை சிறிது நெய் விட்டு வறுத்துப் பொடிக்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் கலந்து, எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.

ஊற வைத்த பச்சைப் பயறை பிழிந்து, ஈரம் போக காய விடவும் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பயறு சேர்த்து வறுத்து எடுத்து, தயாராக உள்ள பொடியை போட்டு கலந்து, குலுக்கி எடுத்து வைக்கவும். சுவையான சத்தான ஸ்நாக்ஸ் இது..

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT