healthy smoothies for summer Image credits: iStock
உணவு / சமையல்

சம்மருக்கு இந்த வித்தியாசமான ஸ்மூத்தீஸை ட்ரை பண்ணி பாருங்களேன்!

நான்சி மலர்

ண்டையகாலத்தில் சத்துமாவு செய்வதற்கு பனங்கிழங்கை தான் பயன்படுத்தினார்கள். இதை ஃபைபரோட (Fiber) தலைவன்னு சொல்லுவாங்க. இதில் புரதம், கேல்சியம், இரும்புச்சத்துன்னு நிறைய சத்துக்கள் இருக்கிறது. இதனால் செரிமானம் நன்றாக இருக்கும். கொலஸ்ட்ரால் கம்மியாக இருக்கும் கொழுப்பு என்பது சுத்தமாக கிடையாது. இது சக்கரை வியாதி,  இருதய பிரச்னை போன்றவற்றை சரி செய்யும். இன்றைக்கு இந்த பனங்கிழங்கை வைத்து ஸ்மூத்தி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

பனங்கிழங்கு ஸ்மூத்தீஸ் செய்ய தேவையான பொருட்கள்;

பனங்கிழங்கு-3

தேங்காய் பால்-1 கப்.

அத்தி பழம்-2

பேரிச்சம்பழம்-2

பெப்பர்- சிறிதளவு.

பனங்கிழங்கு ஸ்மூத்தீஸ் செய்முறை விளக்கம்:

பனங்கிழங்கை நன்றாக வேகவைத்து பிறகு வெயிலில் நன்றாக காயை வைத்து எடுத்துக்கொள்ளவும்.  இப்போது அதை சிறியதாக உடைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போ அதை சலிச்சி எடுத்துட்டு மிக்ஸியில் 3 தேக்கரண்டி செய்து வைத்திருந்த பனங்கிழங்கு மாவை போட்டுக்கொள்ளவும். இத்தோடு 2 அத்திப் பழம், 2 பேரிச்சம் பழம், 1 கப் தேங்காய் பால் சேர்த்து நன்றாக அரைத்து அதை அப்படியே ஒரு கண்ணாடி கிளாசில் ஊற்றி மேலே கொஞ்சம் பெப்பரை தூவி குடிச்சிப் பாருங்க. செம டேஸ்டாயிருக்கும் பனங்கிழங்கு ஸ்மூத்தீ. நீங்களும் வீட்டிலே இதை முயற்சித்து பார்த்துட்டு எப்படியிருந்தது என்று சொல்லுங்க.

தாமரை விதை ஸ்மூத்தீஸ்

தாமரை விதையில் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. உடலில் ரத்தம் சீராக செல்வதற்கும், ஆக்ஸிஜன் உடலில் சீராக இருப்பதற்கும் உதவுகிறது. இதில் ஆன்டிஅக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால் முகச்சுறுக்கம் போன்றவை வராது. தினமும் கையிலே ஒரு பிடி அள்ளி சாப்பிட்டால் மெக்னீசியம் குறைப்பாட்டிலிருந்து விடுபடலாம். இது சிறந்த திண்பண்டமாகவும் விளங்குகிறது. இன்னைக்கு இந்த தாமரை விதையை வைத்து ஸ்மூத்தி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்;

தாமரை விதை-20 கிராம்.

பொட்டுக்கடலை-2 தேக்கரண்டி.

பேரிச்சம்பழம்-2

வாழைப்பழம்-1

பால்-1 டம்ளர்.

தாமரை விதை 20 கிராம் எடுத்து ஃபேனை சூடாக்கிவிட்டு அதில் போட்டு நன்றாக வறுக்கவும். இந்த மக்கான்னாவை ஒரு 5 நிமிஷம் நல்லா வறுத்தெடுத்து கைகளால் அழுத்தினால் உடையும் அப்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

இப்போது இதை மிக்ஸியில் போட்டு அத்துடன் இரண்டு தேக்கரண்டு பொட்டுக்கடலை, வாழைப்பழம் 1, பேரிச்சம் பழம் 2, பால் 1 டம்ளர் சேர்த்து நன்றாக அரைத்து அதை ஒரு கிளேஸ் டம்ளரில் ஊற்றி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான மக்கான்னா ஸ்மூத்தி ரெடி. இந்த வெயிலுக்கு கண்டிப்பாக வீட்டில் ஹெல்தியா செய்து பார்க்க வேண்டிய ரெசிபிஸ். நீங்களும் வீட்டில் செய்து பார்த்துவிட்டு எப்படியிருந்தது என்று சொல்லுங்க.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT