health recipes...  Image credit - laxmibhog.com, timesofindia.com
உணவு / சமையல்

வெஜிடபிள் தளியாவும், ஸ்வீட் தளியாவும்!

இந்திராணி தங்கவேல்

வெஜிடபிள் தளியா:

செய்ய தேவையான பொருட்கள்:

சம்பா கோதுமை ரவா- ஒரு கப்

பீன்ஸ், கேரட், கேப்சிகம், பொடியாக நறுக்கியது -இரண்டு கப் 

வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது

பச்சை மிளகாய் -பொடியாக நறுக்கியது நான்கு

தனியா கறிவேப்பிலை -ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய்ப் பொடி -ஒரு டீ ஸ்பூன்

மஞ்சள் பொடி -சிறிதளவு

மல்லிப் பொடி- ஒரு டீஸ்பூன்

பச்சை வேர்க்கடலை -ஒரு கைப்பிடி

உப்பு எண்ணெய் -தேவைக்கேற்ப

கடுகு , உளுத்தம் பருப்பு -தாளிக்க

செய்முறை:

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும். காய்ந்ததும் கடுகு, கடலை, கருவேப்பிலை தனியா தாளித்து வெங்காயம், அரிந்து வைத்த காய்கறி அனைத்தையும் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் பொடிகளை சேர்த்து கிளறவும். பிறகு கழுவி வைத்திருக்கும் சம்பா கோதுமையுடன் உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர்விட்டு, குக்கரில் மூன்று விசில் விட்டு எடுக்கவும். வெஜிடபிள் தளியா ரெடி. 

வேர்க்கடலை சட்னி:

தேவையான பொருட்கள்:

ஆறு -வர மிளகாய்

ரெண்டு டேபிள் ஸ்பூன்- தேங்காய் துருவல்

வறுத்த வேர்க்கடலை- ரெண்டு கைப்பிடி 

உப்பு -தேவையான அளவு. 

பூண்டு பல் -இரண்டு

புளி- சிறிதளவு 

செய்முறை :

மேலே கூறிய அனைத்தையும் மிக்ஸியில் இட்டு தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும் .பிறகு ஒரு கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து சட்னியில் சேர்க்கவும். இதை தளியா உடன் சேர்த்து சாப்பிட ருசி அள்ளும்.

இனிப்பு தளியா:

செய்யத் தேவையான பொருட்கள்:

வறுத்த பொடியான சம்பா ரவா-1கப்

சீனி -ஒரு கப்

பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு, வெள்ளரி விதை எல்லாவற்றையும் சேர்த்து கரகரப்பாக பொடித்தது- அரை கப்

ஏலப்பொடி -சிறிதளவு

உப்பு -ஒரு சிட்டிகை

நெய்- அரை கப்

செய்முறை:

அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து  மூன்று கப் தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் தளியாவை (வறுத்த கோதுமை ரவையை) போட்டு கிளரவும். நன்றாக வெந்ததும் ஜீனி, நெய் விட்டு, உப்பு சேர்த்து எலப்பொடி மற்றும் பொடித்து வைத்துள்ள நட்ஸ் பொடியலை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். கம கம வாசனையில் இனிப்பு தளியா ரெடி.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT