உணவு / சமையல்

வெந்தயகீரை புலாவ்

கல்கி

வி.கலைமதிசிவகுரு, நாகர்கோவில்

தேவை:

சீரகசம்பாஅரிசி _1கப்

தேங்காய் பால் _1/2கப்

தண்ணீர் _1கப்

வெந்தயக்கீரை_1கட்டு

பெரிய வெங்காயம்_1

தக்காளி _1

மிளகாய் _3

இஞ்சி பூண்டு பேஸ்ட் 2ஸ்பூன்

நெய் _ 2ஸ்பூன்

எண்ணெய்_2ஸ்பூன்

ஏலக்காய், கிராம்பு _2

அன்னாசி பூ _1

பிரியாணி இலை _1

முந்திரி பருப்பு _8

தேவைக்கு உப்பு

செய்முறை:

ஒரு குக்கரில் எண்ணெயும், நெய்யும் விட்டு சூடானதும் பிரியாணி இலை, அன்னாசிபூ, கிராம்பு ஏலக்காய், முந்திரி பருப்பு போட்டு வறுக்கவும். தீயை சிம்மில் வைத்து கொள்ளவும். வெங்காயத்தைமெல்லிசா வெட்டி சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி, சிறிது உப்பு போட்டு சுருண்டு வரும் வரை வதக்கவும். பின் அதனுடன் சிறிய கட்டு வெந்தயகீரை இலையை சிறிதாக வெட்டி போட்டு கூடவே மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு கிளறவும். அரிசியை15நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் சேர்த்து அரிசி உடையாமல் கலந்து விடவும். அதனுடன்1/2கப் தேங்காய் பால்,1கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும். பிறகு குக்கரில் மூடி போட்டு வெயிட் போட்டு2 விசில் வந்ததும்5நிமிடம் சிம்மில் வைத்து விட்டு பிறகு அடுப்பை அணைத்து விடலாம்.10 நிமிடம் கழித்து திறந்து வேறு ஒரு பாத்திரத்தில் தட்டி கரண்டியால் சிறிது புரட்டி விடவும். மிகவும் சுவையான, ஆரோக்கி யமான வெந்தயபுலாவ் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். ரெடி.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

மகாராஷ்திராவின் பெருமையாகக் கருதப்படும் Puneri pagadi தலைப்பாகை!

SCROLL FOR NEXT