அரிசி பருப்பு சாதம் கோயம்பத்தூர் கொங்கு நாட்டு பகுதிகளில் மிகவும் பிரபலம். இந்த உணவு 4ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்த பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கே எப்படி பிரியாணி பிரபலமோ அதேபோல கொங்கு பகுதிகளில் அரிசி பருப்பு சாதம் மிகவும் பிரபலம். அத்துடன் இதை சுலபமாக 10 நிமிடத்தில் செய்து விடலாம். சுவையும் வேற லெவலில் இருக்கும். சரி வாங்க, அரிசி பருப்பு சாதம் சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
அரிசி பருப்பு சாதம் செய்ய தேவையான பொருட்கள்;
அரிசி -1கப்.
துவரம் பருப்பு -1/2 கப்.
எண்ணெய்-1 தேக்கரண்டி.
நெய்-1 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
ஜீரகம்-1தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
சின்ன வெங்காயம்-1கப்.
கருவேப்பிலை- சிறிதளவு.
பச்சை மிளகாய்-2
வெங்காயம்-1 கப்.
தக்காளி-1 கப்.
பூண்டு-5
தனியா-1 தேக்ககரண்டி.
சோம்பு-1 தேக்கரண்டி.
ஜீரகம்-1 தேக்கரண்டி.
மிளகு-1 தேக்கரண்டி.
பட்டை -சிறுதுண்டு.
கிராம்பு-1.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
அரிசி பருப்பு சாதம் செய்முறை விளக்கம்;
அரிசி 1 கப், துவரம் பருப்பு ½ கப் சேர்த்து 30 நிம்மிடம் ஊற வைத்து கொள்ளவும்.
இப்போது குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் 1 தேக்கரண்டி, நெய் 1 தேக்கரண்டி சேர்த்து அதில் 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுந்து, ஜீரகம் 1 தேக்கரண்டி,சின்ன வெங்காயம் 1கப், கருவேப்பிலை சிறிதளவு, பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1கப், தக்காளி 1 கப், பூண்டு 5 சேர்த்து நன்றாக வதக்கவும்.
தனியா 1 தேக்கரண்டி, ஜீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, பட்டை சிறு துண்டு, கிராம்பு 1 சேர்த்து மொத்தமாக அரைக்கவும். அந்த பொடியை வதக்கி கொண்டிருக்கும் வெங்காயத்துடன் சேர்த்து அத்துடன் மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து கிண்டியதும் ஊற வைத்திருக்கும் அரிசி, பருப்பை இதில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து இறக்கினால் அரிசி, பருப்பு சாதம் தயார். நீங்களும் வீட்டிலே முயற்சி பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.
கர்ட் கரி செய்ய தேவையான பொருட்கள்;
தயிர்-1 கப்.
கடுகு-1 தேக்கரண்டி.
ஜீரகம்-1தேக்கரண்டி.
வெங்காயம்-1 கப்.
பச்சை மிளகாய்-1
கருவேப்பிலை- சிறிதளவு.
இஞ்சி-1துண்டு.
தக்காளி-1 கப்.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
பெருங்காய தூள்- சிறிதளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
உப்பு- தேவையான அளவு.
கர்ட் கரி செய்முறை விளக்கம்;
முதலில் ஒரு ஃபேனில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, ஜீரகம் 1 தேக்கரண்டி, வெங்காயம் 1கப், கருவேப்பிலை சிறிதளவு, இஞ்சி 1 துண்டு நசுக்கி சேர்த்து கொள்ளவும், பச்சை மிளகாய் 1, தக்காளி 1, உப்பு சிறிதளவு, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, பெருங்காய தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக தொக்கு பதத்திற்கு வதங்கியதும், தயிர் 1கப் சேர்த்து நன்றாக கிண்டி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கர்ட் கரி தயார். இதை சாப்பாத்தி, பூரியுடனும் சேர்த்து சாப்பிடலாம் சூப்பராக இருக்கும். நீங்களும் வீட்டில் ஒருமுறை முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க.