வீடு / குடும்பம்

தேவையில்லை என்று நினைத்து, வேஸ்டாக்காமல் இருக்க 10 ஐடியாஸ்!

சி.ஆர்.ஹரிஹரன்

1. எந்தப் பொரியலாக இருந்தாலும் மீந்து விட்டால் அதில் கொஞ்சம் வெங்காயமும், கடலை மாவும் சேர்த்துப் பிசைந்து எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாக பொரித்துச் சாப்பிடலாம்.

2. ஊறுகாய் காய்ந்து விட்டால் அதை பாழாக்காமல் அந்த ஊறுகாய் ஜாடியில் ஒரு டீஸ்பூன் கரும்புச் சாறு சேர்த்தால் புதிய ஊறுகாய் சுவையுடன் தயார்!

3. வேகவைத்த உருளைக்கிழங்கின் தோலை வைத்து கண்ணாடிகளைத் துடைத்தால் கண்ணாடி பளிச்சிடும்.

4. தேங்காய்ப் பால் பிழிந்து விட்டு அதன் சக்கையை தூர எறிந்து விடாமல் அதில் கலர் பொடிகள் கலந்து காய வைத்து கோலம் போட்டால் கோலம் அழகு மிளிரும்.

5. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீட்டுத் தோட்டத்திலிருக்கும் காய்கறிச் செடிகளுக்கு ஊற்றினால் அவை செழிப்புடன் வளரும்.

6. கமலா ஆரஞ்சுப் பழத்தின் தோல்களை சுத்தப்படுத்தி எண்ணெயில் வதக்கி உளுந்து, மிளகு சேர்த்து சுவையான துவையல் செய்யலாம்.

7. அதுபோல் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை காய்ந்து விட்டால் இட்லி அவிக்கும்போது இட்லிப்பானையில் உள்ள நீரில் போட்டு அவித்தால் இட்லி நல்ல மணத்துடன் இருக்கும்.

8. ஆரஞ்சுப்பழத்தின் தோலைப் பொடியாக்கி ரசம் வைக்கும் போது சேர்த்தால் கம கம ரசம் தயார்!

9. இட்லி மாவு கொஞ்சம் போல் மீந்துவிட்டால் அதை வீணாக்க வேண்டாம். சமையலறையில் இருக்கும் எண்ணெய் பாத்திரங்களைச் சுத்தமாக கழுவி எடுக்க அந்த மாவை பயன்படுத்தலாம்.

10. பயன்படுத்த முடியாத தயிர், மோர் இருந்தால் அதை வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் கறிவேப்பிலை மரத்தின் வேர் பாகத்தில் ஊற்றினால் கறிவேப்பிலைக்கு நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும்.

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT