குடும்ப ஒற்றுமை 
வீடு / குடும்பம்

குடும்பத்தில் சந்தோஷத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கும் 10 யோசனைகள்!

பொ.பாலாஜிகணேஷ்

குடும்பம் என்றாலே சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். சண்டை சச்சரவு இல்லாத குடும்பம் இல்லை என்று சொன்னால் அது மிகையில்லை. ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு பிரச்னைகள் வந்து கொண்டுதான் இருக்கும். பகையையும் வருத்தத்தையும் நாம் வளர்க்கக் கூடாது. அது பேராபத்து என்பதை உணர்த்தும் பதிவுதான் இது.

1. ஒற்றுமையுடன் கூடிய அழகிய குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்க முதல் காரணம் குடும்பப் பெண்கள்தான். குடும்பத் தலைவியாக வீட்டுக்கு வரும் பெண்ணின் கையில்தான் அந்தக் குடும்பத்தின் வெற்றி இருக்கு.

2. குடும்பத்தில் இருக்கும் ஓவ்வொருவரையும் மற்றவர் மதிக்கப் பழகுங்கள். மற்றவர்களின் மனநிலைக்கு தகுந்தது போல் முடிந்தால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். (விட்டுக்கொடுத்து பழகுங்கள்) நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற அகம்பாவம் வேண்டாம்.

3. தாழ்வு மனப்பான்மையினை அடியோடு அப்புறப்படுத்துங்கள். அனைவரிடமும் சகஜமாகப் பேசுகள். மனம் திறந்து பாராட்டுங்கள். சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தி அதற்கு கை, கால் வைத்து அழகுபடுத்த வேண்டாம்.

4. வாழ்க்கையின் பிரச்னைக்கு தீர்வு என்னவென்று தேடுகள். பதிலடி கொடுக்க முயற்சி செய்யாதீர்கள். தேவையற்ற குழப்பங்களை மனதில் ஏற்ற வேணடாம்.

5. நாம் சந்தோஷமாக இருந்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள் என்பதனை மனதில் கொண்டு சிரித்த முகத்துடன் பேசி பழகுங்கள். உங்கள் விருப்பங்களை உங்கள் குடும்ப நண்பர்கள் கேட்க வேண்டும் என்று எண்ண வேண்டாம்.

6. குழந்தைகளுடன் சந்தோஷமாகப் பேசி, விளையாடி இருங்கள். சிறு குழந்தையாக இருக்கும் குட்டி குழந்தைகள் செய்யும் சேட்டைகளை ரசியுங்கள். சேட்டை அதிகமானால் கண்டிக்கவும் மறுக்காதீர்கள்.

7. நம் உடல் ஆரோக்கியம் இல்லாதபொழுதுதான் மனதில் சந்தோஷம் நம்மை விட்டு போகும். முடிந்த வரை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கப் பழகுங்கள்.

8. எல்லா நேரமும் வேலை வேலை என்று இருக்காமல் உங்களுக்கு என்று ஒரு சில மணி நேரங்கள் ஓய்வெடுத்து உங்களுக்குப் பிடித்த காரியங்களில் ஈடுபடுங்கள்.

9. குடும்பத்தில் பிரச்னைகள் வரும்பொழுதோ அல்லது டென்ஷன் அதிகமாக இருக்கும் பொழுதோ அவசர முடிவு எதனையும் எடுக்காதீர்கள். முடிந்த வரை குடும்பத்தில் அனைவரும் ஒன்றாய் சிரித்துப் பேசி பழகுங்கள்.

10. மற்றவர்களிடம் நாம் காட்டும் வெறுப்பு நம் மனதினை மேலும் மேலும் குப்பையாக்குகிறது. அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். இதனால் மனது தூய்மையாகும்.

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

'இளமையில் கல்' என்பதன் அர்த்தமும் அதன் புரிதலும்... இது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT