15 Love Philosophies of Philosophers! 
வீடு / குடும்பம்

‘காதல்’ பற்றிய புரிதலை ஏற்படுத்தும் தத்துவவாதிகளின் 15 தத்துவங்கள்!

பாரதி

உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக இருக்கக் கூடிய உணர்வுகளில் ஒன்று காதல். ஒவ்வொரு உயிரினமும் தங்களுக்கு ஏற்ற வகையில் காதலை பற்றி புரிந்துக்கொள்கிறன. ஆனால் மனிதர்கள் மட்டுமே இதுதான் காதலா? இல்லை அதுதான் காதலா? என்ற கேள்விகளுக்குள் குழம்பித் தவிக்கிறார்கள்.

ஒவ்வொருவரின் அனுபவங்களுக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு காதலின் அர்த்தங்கள் மாறும். இறுதியாக, ‘இதுதான் காதல்’ என்று சொல்ல முடியாத அளவிற்கு பல அர்த்தங்களும், குழப்பங்களும் நிறைந்தவைதான் காதல். அந்தவகையில் காதல் பற்றி உலகின் சிறந்த தத்துவாதிகள் கூறிய தத்துவங்களைப் பற்றி பார்ப்போம்.

1.  ஒருவரை அதிகமாக காதலிக்கும்போது தைரியம் உண்டாகும். அதேபோல் ஒருவர் உங்களை அதிகமாக காதலிக்கும்போது பலம் உண்டாகும்.- Lao Tzu

2.  இரு உயிர்களின் ஒரே எண்ணம், இரு இதயங்களின் ஒரே துடிப்பு- காதல். – John Keats

3.  எப்போதும் காதலில் ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்கும். ஆனால், அந்தப் பைத்தியக்காரத்தனத்திற்கு காரணங்களும் இருக்கும். – Frederiche Nietzsche

4.  காதலில் அனுபவம் அடைந்த பிறகே, வாழ்க்கையின் மற்றொரு பக்கம் தெரியும். – Naveen Bommakanti

5.  காதலிக்க ஆரம்பித்துவிட்டாலே, அவன் கவிஞனாகி விடுகிறான். –Plato

6.  காதலில் மட்டுமே, ஒருவர் மற்றும் ஒருவர் சேர்ந்தால் ஒருவராவர். – Jean paul

7.  காதல் என்பது இயற்கையால் தீட்டப்பட்ட ஓவியம். அந்த ஓவியத்தை அழகுப்படுத்துவது கற்பனையே. – Voltaire

8.  ஒவ்வொரு இதயமும் பாடல் பாடும். ஆனால் மற்றொரு இதயம் ராகம் எழுப்பாதவரை அது முழுமையடையாது. – Plato

9.  மனித வாழ்வுக்கு அறிவுப்பூர்வமான மற்றும் திருப்திகரமான இரு விடை என்றால் அது காதல்தான். – Erich

10. எத்தனை முறை சுவாசிக்கிறோம் என்று எண்ணுவதால் வாழ்க்கையை அளவிட முடியாது. உணர்வுகளுக்கு வேலை அதிகமாகி காதலில் விழும்போதுதான் வாழ்க்கையின் அளவு தெரியவரும். - பெயர் தெரியவில்லை

11. காதலிக்க பயம் கொள்பவன், வாழவே பயம் கொள்வான். வாழ பயம்கொள்பவன் ஏற்கனவே நான்கில் மூன்று பங்கு இறந்துவிட்டான். - பெயர் தெரியவில்லை

12.  காதல்தான் அனைத்தும். நாம் அதில் ஒரு துண்டுதான். – Rumi

13. காதலித்துவிட்டால் எதிரே உள்ளவரின் புன்னகையே அனைத்தையும் விட உங்களுக்கு முக்கியமானதாகத் தெரியும். -  Robert A.

14.  எரியாத விளக்கில் எண்ணெய் இல்லையென்றால் கூட, காதல்  எரிய வைத்துவிடும். பெயர் தெரியவில்லை.

15.  காதல் இல்லாத வாழ்க்கை என்பது பழம், இலைகள் இல்லாத மரமாகும். – Khalil Gibran.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT