Blue Tea Image Credits: Teaology
வீடு / குடும்பம்

கலர் கலரான 5 வகை டீக்களும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்!

நான்சி மலர்

ம் அன்றாட வாழ்வில் விரும்பி அருந்தக்கூடிய டீக்கள் பல சுவைகளில் மட்டுமில்லாமல், பல நிறங்களிலும் இருக்கிறது. ஒவ்வொரு நிற டீயும் ஒவ்வொரு ஆரோக்கிய பயன்களைக் கொண்டதாக உள்ளன. எந்த நிற டீயை எதற்காக குடிக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. Blue Tea: சங்கு பூவிலிருந்து தயாரிக்கப்படும் Blue teaயில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இதயம் மற்றும் மூளை சம்பந்தமான ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. சர்க்கரை வியாதி, கேன்சர் போன்ற வியாதிகள் வராமல் தடுக்க இது உதவுகிறது. இதன் நீல நிறத்திற்கு காரணம், ஆன்டி ஆக்ஸிடென்டான Anthocyanins என்னும் பிக்மெண்டேயாகும். இந்த டீயை பருகுவதால் இரத்த அழுத்தம், இதய சம்பந்தமான பிரச்னை, இரத்த நாளங்களில் உள்ள அடைப்பு, ஸ்ட்ரெஸ் போன்ற பிரச்னைகளைப் போக்குகிறது.

Yellow Tea

2. Yellow tea: Dandelion plantல் இருந்து Yellow tea தயாரிக்கப்படுகிறது. இந்த செடியின் இலைகளும், வேர்களும் டீ செய்வதற்கு உதவுகிறது. இந்த டீயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, கேல்சியம், பொட்டாசியம் ஆகியவை இருக்கின்றன. இது வயிற்றிலுள்ள செரிமானப் பிரச்னையை போக்குவது மட்டுமில்லாமல், கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.

Red Tea

3.Red Tea: Hibiscusல் இருந்து தயாரிக்கப்படும் சிவப்பு நிற டீயில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது. இது உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது, பாக்டீரியா மற்றும் கேன்சர் செல் வளர்ச்சியை இது தடுக்கிறது. இதயம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

Pink Tea

4. Pink Tea: ரோஜா இதழ்களை வைத்து தயாரிக்கப்படும் பிங்க் டீ ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க உதவுகிறது, செரிமான பிரச்னைகளை போக்குகிறது. வயிற்று வலி பிரச்னைகளை சரிசெய்கிறது, வீக்கப் பிரச்னையை போக்க உதவுகிறது. இதில் அதிக Anti bacterial properties இருப்பதால், பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களிடமிருந்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

Matcha Green Tea

5. Matcha Green Tea: இது ஒருவகையான கிரீன் டீயாகும். இது தனித்துவமான கசப்புத்தன்மை இல்லாத பச்சை நிறத்தில் அதிக வாசனையை கொண்ட கிரீன் டீ வகையாகும். இந்த டீயில் அதிகமாக ஆண்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இந்த டீயை அருந்துவது, எலும்பு மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். Matcha green teaல் நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கு நல்லதாகும். வைட்டமின் சி, மெக்னீசியம், Chromium, Selenium, Zinc ஆகியவை உள்ளதால் கொலஸ்ட்ராலை போக்குவதற்கும், இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவுகிறது. இந்த 5 டீயில் உங்களுக்கு பிடித்த டீயும், அதன் நிறமும் எதுவென்று சொல்லுங்கள்.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

SCROLL FOR NEXT