Good habits to teach children 
வீடு / குடும்பம்

10 வயதுக்குள் குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய 7 பழக்க வழக்கங்கள்!

ம.வசந்தி

குழந்தைகள் வாழ்க்கையை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வெற்றி பெறவும் பெற்றோர்கள் விரும்பினால் 10 வயதுக்குள் சில முக்கியமான பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் அதிகம் கற்றுக்கொள்ளும் திறன் உடையவர்கள் என்பதால் குழந்தைப் பருவத்திலேயே நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லி வளர்க்க வேண்டும். குழந்தைகள் வளர்ந்த பிறகு எந்த ஒரு புதிய விஷயத்தையும் கற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அந்த வகையில் 10 வயதுக்குள் கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டிய 7 பழக்க வழக்கங்களை இந்தப் பதிவில் காண்போம்.

1. தொடர்பு திறன்: குழந்தைகள் அவர்களது கருத்துக்களை தெளிவாக அடுத்தவரிடம் கூறவும், கேட்கவும் மற்றும் அவர்களது உணர்வுகளை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தவும் கற்றுக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

2. சிக்கல் தீர்ப்பது: குழந்தைகளின் வயதிற்கு ஏற்றாற்போல் அவர்களால் தீர்க்கக்கூடிய சில சவால்களையும் புதிர்களையும் முன்வைப்பது குழந்தைகள் சிக்கலைத் தீர்க்கும் திறனை வளர்க்க உதவும். இதனால் வளர்ந்த பிறகு அவர்கள் சிக்கல்களை சுலபமாக எதிர்கொண்டு வெற்றியடைவார்கள்.

3. தோல்வியில் பாடம்: வாழ்க்கையில் தோல்விகள் வரும்போது அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் புரிய வைப்பதோடு, தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். மேலும், தோல்வியிலிருந்து மீண்டு வருவது எப்படி என்பது பற்றியும் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது எப்படி என்பதனையும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

4. பொறுப்பு: குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வகையில் உடைமைகளை எப்படி பாதுகாப்பது, பணிகளை திறம்பட செய்வது எப்படி, கடமைகளை நிறைவேற்றுவது போன்ற விஷயங்களையும் பொறுப்புகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

5. அனுதாபம்: குழந்தைகளுக்கு மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் அவர்களை ஊக்குவிக்கவும் பாரபட்சமின்றி அனைவரிடமும் கருணையுடன் நடந்து கொள்ளவும் பழக்கினால் இந்தப் பழக்கங்கள் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.

6. டைம் டேபிள்: நேர நிர்வாகம் வெற்றிகரமான வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. குழந்தைகளுக்கு எந்த வேலைகளை எவ்வளவு நேரத்தில் செய்ய  வேண்டும் என்பதனை பழக்க வேண்டும். முதலில் சிறிது கடினமாக இருந்தாலும் போகப்போக பழகிவிடும்.

7. நிதி அறிவு: குழந்தைகளுக்கு பணம் சேமிப்பது, செலவு செய்வது மற்றும் பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவது அதை எப்படி நிர்வகிப்பது என்பதனை கற்றுக் கொடுப்பதோடு, ஒரு உண்டியல் வாங்கிக் கொடுத்து கொஞ்சம் பணம் சேர்க்கவும் பழக்கப்படுத்த வேண்டும். இதனால் கடினமான காலங்களில் கூட எந்த பிரச்னையும் இல்லாமல் அவர்களால் வெளிவர முடியும்.

மேற்கூறிய 7 அற்புதமான பழக்க வழக்கங்களை 10 வயது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதால் அவர்களது வாழ்வு பிரகாசமாக இருக்கும்.

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

'இளமையில் கல்' என்பதன் அர்த்தமும் அதன் புரிதலும்... இது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT