7 Mistakes That Can Lead to Relationship Breakups. 
வீடு / குடும்பம்

Breakup ஏற்படக் காரணமாகும் 7 தவறுகள்... இப்படியெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்!

கிரி கணபதி

ஆரோக்கியமான மற்றும் அன்பான உறவை வளர்ப்பதற்கு முயற்சி, புரிதல் மற்றும் சரியான கம்யூனிகேஷன் தேவை. இருப்பினும் நீங்கள் செய்யும் சில தவறுகளால் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டு இறுதியில் Breakup-க்கு வழி வகுக்கலாம். இந்த பதிவில் காதலில் விரிசலை ஏற்படுத்தும் 7 முக்கிய தவறுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

  1. கம்யூனிகேஷன் இல்லாமை: அதாவது, எந்த ஒரு உறவாக இருந்தாலும் அதில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, நீங்கள் எந்த அளவுக்கு அவர்களுடன் தொடர்பு கொள்கிறீர்கள் என்பதுதான். உங்கள் உணர்வுகள், தேவைகள் மற்றும் கவலைகளை, உங்கள் காதலன் அல்லது காதலியிடம் வெளிப்படுத்தத் தவறினால், காலப்போக்கில் இது தவறான புரிதல்களை ஏற்படுத்தி அந்த உறவே முறிந்துவிடும் வாய்ப்புள்ளது. எனவே காதலில் முறையான கம்யூனிகேஷன் மிகவும் முக்கியமானது. 

  2. ஒருவரை ஒருவர் சாதாரணமாக எடுத்துக் கொள்வது: உங்கள் துணையை எந்த தருணத்திலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதாவது அவர்களின் முயற்சிகளை பாராட்ட தவறுவது, அவர்களின் பங்களிப்பை நிராகரிப்பது அல்லது அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க மறுப்பது போன்றவை உறவில் அதிருப்தியை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது உங்களது துணைக்கான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

  3. நம்பிக்கையின்மை: நம்பிக்கைதான் காதலின் அடித்தளம். துரோகம், நேர்மையின்மை அல்லது நம்பிக்கையின்மை போன்றவற்றால் உங்களது உறவில் விரிசல் ஏற்படலாம். இது உங்கள் காதல் உறவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும். எனவே ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் என்றும் நம்பிக்கையுடன் இருங்கள். 

  4. நேரம் செலவிடத் தவறுவது: என்னதான் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் பிசியாக இருந்தாலும், உங்கள் அன்புக்குரியவருடன் நேரத்தை செலவிட வேண்டியது மிகவும் முக்கியம். அந்த நேரத்தில் நீங்கள் உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலமாக உறவின் பலம் அதிகரிக்கும். நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளும் நல்ல தருணங்கள் உங்களது பிணைப்பை மேலும் வலுவாக்கி மகிழ்ச்சியான உறவை மேம்படுத்த உதவும். 

  5. விமர்சனம்:  அதிகப்படியான விமர்சனம் நிச்சயம் உங்களது உறவை மோசமாக்கும். தொடர்ச்சியாக குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டுவது, உங்கள் துணையை இழிவுபடுத்துவது அல்லது தொடர்ந்து அவர்களை நச்சரித்துக் கொண்டே இருப்பது போன்ற செயல்கள் அவர்களுக்குள் வெறுப்பை வளர்க்கும். எனவே இத்தகைய செயல்களில் ஒருபோதும் ஈடுபடாதீர்கள். 

  6. சுய கவனிப்பைத் தவிர்ப்பது: நீங்கள் பிறரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், முதலில் உங்களை நீங்கள் அதிகம் கவனிக்க வேண்டும். நீங்கள் உங்கள் மீது அக்கறை காட்டாதபோது, பிறருக்கு உங்கள் மீதான ஈடுபாடு குறைய ஆரம்பிக்கும். சுய கவனிப்பை புறக்கணிப்பதால், மன அழுத்தம், உணர்வு குறைபாடு மற்றும் துணையின் மீது வெறுப்பு ஏற்படலாம். எனவே உங்கள் காதல் உறவு நீடித்திருக்க, உங்களை முதலில் நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். 

  7. மோதலை தவறாக கையாள்வது: காதல் உறவில் மோதல் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் இதை முறையாகக் கையாளத் தவறினால் அது பிரேக்கப்பில் முடியும் வாய்ப்புள்ளது. எனவே உங்களுக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக அதற்கான காரணங்களை ஒன்றாக சேர்ந்து பேசி சரி செய்துகொள்வது நல்லது. 

உங்களது காதல் உறவில் இந்த 7 விஷயங்களில் கவனமாக இருங்கள். இவற்றை முறையாக கையாளத் தெரிந்தாலே, காதல் உறவை நன்றாக கொண்டு செல்ல முடியும். 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT