A united life gives strength https://eluthu.com
வீடு / குடும்பம்

ஒன்றுபட்ட வாழ்க்கையே வலிமை சேர்க்கும்!

பொ.பாலாஜிகணேஷ்

ற்றுமை, ஒன்றுபடுதல் இதெல்லாம் இக்காலத்திற்கு ஏற்றதுதானா என்ற சந்தேகம் நமக்குள் எழும் அளவிற்கு இந்த சமுதாயத்தில் பல மாற்றங்கள் நடக்கின்றன. கூட்டுக் குடும்பம் என்ற கலாச்சாரம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இதெல்லாம் கவலை தரக்கூடிய ஒரு விஷயம்தான். பத்து வருடம் வாழ்வோம், ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் பெயர் நமக்குத் தெரியாது. இதுதான் இன்றைய டிஜிட்டல் உலகம் என்று கூட சொல்லலாம்.

வீடோ, நாடோ அனைத்திலும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும் நாடும் சீரழிந்து விடும். இதனைத்தான், ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. ஒன்றுபட்டுச் செயல்பட்டால் அனைவரும் வாழலாம். இல்லையெனில் அனைவருக்கும் அழிவு என்பது உறுதி.

கிராமத்தில் ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். நால்வரும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். அதனைக் கண்டு அவர் மிகவும் வருத்தமாக இருந்தார். ‘ஒற்றுமையாக இருங்கள்’ என்று அவர் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை.

ஒரு நாள் அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போகவே, அவர்களுக்குப் பாடம் புகட்ட, புத்தி சொல்ல ஒரு போட்டியை நடத்தினார். அவர் நால்வரையும் ஆளுக்கொரு கம்புகளை எடுத்து வரச் சொன்னார். அவர்களும் கொண்டு வந்தார்கள்.

மூத்த மகனை அழைத்து நான்கு கம்புகளையும் ஒன்றாகக் கட்டச் சொன்னார். பிறகு ஒவ்வொருவரையும் அழைத்து அந்தக் கட்டியக் கம்புகளை உடைக்கச் சொன்னார். யாராலும் முடியவில்லை.

பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவ்வொன்றாகக் கொடுத்து உடைக்கச் சொன்னார். அனைவரும் சுலபமாக உடைத்தார்கள். ‘ஒற்றுமையின் பலம் என்னவென்று இப்போது தெரியும்னு நினைக்கிறன். நீங்கள் நாலு பேரும் நான்கு கம்புகளைப் போலத்தான். ஆனால், ஒற்றுமையாக இருந்தால் யாரும் உங்களை அசைக்க முடியாது’ என்று கூறினார்.

எவ்வளவு சின்னப் பொருளானாலும், அவை ஒன்று சேரும்போது எந்த செயலையும் முடிப்பது அவ்வளவு எளிது அல்ல. அதைப்போலவே பல பேருடைய மனம்  ஒன்றுபட்டால், செய்ய முடியாதது எதுவுமில்லை. ஒன்றுபட்டு வாழ்வோம்; வாழ்வில் உயர்ந்து நிற்போம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT