Albert Einstein Weird Habits
Albert Einstein Weird Habits https://www.bbc.co.uk
வீடு / குடும்பம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வினோத பழக்க வழக்கங்கள்!

எஸ்.விஜயலட்சுமி

ல்பர்ட் ஐன்ஸ்டீன், இயற்பியலுக்கான அற்புத பங்களிப்புகளுக்கு புகழ் பெற்றவர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி. அவரது வாழ்வில் நடந்த சில வேடிக்கையான விநோத சம்பவங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சாக்ஸ் அணிவதில் வெறுப்பு: ஐன்ஸ்டீன் ஒரு சிறந்த விஞ்ஞானியாக இருந்தாலும் தனது தோற்றத்தைப் பற்றி அவ்வளவாக அவர் கவலைப்பட மாட்டார். மேலை நாட்டினர் பொதுவாக தங்களது தோற்றத்தைப் பற்றியும் உடையைப் பற்றியும் மிகுந்த அக்கறை காட்டுவது வழக்கம். அணியும் உடைக்கு தகுந்தாற்போல சாக்ஸ் அணிந்து, ஷூக்கள் அணிவது அவர்களது வழக்கம். ஐன்ஸ்டீன் எப்போதும் சாக்ஸ் அணிவதில் அவ்வளவாக விருப்பம் இல்லாமல் இருந்தார்.

நிறைய நேரங்களில் அவற்றை அணிய மறந்து விடுவார் அல்லது பொருந்தாத ஜோடிகளை அணிவார். சாக்ஸ் மீதான அவரது வெறுப்பு மிகவும் வலுவாக இருந்தது. சாதாரண நிகழ்வுகளில் கூட அவற்றை அணிய மறுத்தார். 1921ல் நோபல் பரிசை பெற்ற அந்த விழாவில் கூட அவர் சாக்ஸ் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் அவர் சாக்ஸ் அணியும்போது சரியாக அணியத் தெரியாமல் அவரது பெருவிரல் எப்போதுமே காலுறையில் ஒரு ஓட்டையை உருவாக்குகிறது என்று அறிந்தார் அதனால் அவர் சாக்ஸ் அணிவதை வெறுத்தார்.

கலைந்த சிகை அலங்காரம்: அவர் சிகை அலங்காரத்தில் எப்போதும் அக்கறை காட்டுவது இல்லை. கலைந்த சிகை தோற்றத்தை அவரே தேர்வு செய்தார். ஏனென்றால், தலை முடியை சீர்படுத்துதல் போன்ற அற்ப விஷயங்களில் நேரத்தை வீணடிக்கத் தான் விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்ப்பது போன்ற முக்கியமான விஷயங்களில் தனது ஆற்றலை செலுத்த விரும்பியதாகவும் தலைமுடி கலைந்தால் அதை மறுபடியும் சீவிக் கொள்வது ஒழுங்குபடுத்துவது போன்றவற்றில் தனக்கு எப்போதும் விருப்பமில்லை என்று கூறி இருக்கிறார்.

குறும்புத்தனம்: குறும்புத்தனத்திற்கும் விளையாட்டு, நகைச்சுவை உணர்விற்கும் பெயர்போனவர் ஐன்ஸ்டீன். எப்போதும் தன்னுடைய நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் குறும்பு செய்து விளையாடி மகிழ்வது அவரது வழக்கம். புகைப்படங்களில் எப்போதும் நாக்கை நீட்டியிருப்பது போல குறும்புத்தனமாக போஸ் கொடுப்பார். பின்னாளில் இது ஒரு அடையாளச் சின்னமாகவே மாறியது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

மறதி: இவர் ஒரு பெரிய இயற்பியல் விஞ்ஞானியாக இருந்தாலும் ஐன்ஸ்டீனுக்கு ஞாபக மறதி அதிகம். அடிக்கடி முக்கியமான ஆவணங்களையும் சந்திப்புகளையும் மறந்து விடுவார். ஒரு சமயம் பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரை ஆற்றிய பிறகு வீட்டிற்குத் திரும்ப வண்டி ஓட்டுநர் அவரது வீட்டு முகவரியை கேட்டபோது அவரால் அதை நினைவிற்கு கொண்டு வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இசையின் மீது ஈர்ப்பு: அவர் ஒரு இயற்பியல் மேதை மட்டுமல்ல, இசையின் மீது ஆழ்ந்த ஈர்ப்புக் கொண்டிருந்தார். மிகவும் திறமையாக வயலின் வாசிப்பார். தனது அறிவியல் சிக்கல்களைப் பற்றி ஆக்கப்பூர்வமாக சிந்திக்க அவர் அடிக்கடி வயலின் வாசித்தார்.

பூனைப்பாசம்: ஐன்ஸ்டீன் விலங்குகளை மிகவும் நேசித்தார். குறிப்பாக, பூனைகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய செல்லப்பிராணி டைகர் என்று பெயரிடப்பட்ட பூனை. அவர் நடைப்பயிற்சி செல்லும்போது அதுவும் கூடவே செல்லுமாம்.

பப்பாளி இலையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

மாமிச உண்ணிகளின் வயிற்றை விட, தாவர உண்ணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன் தெரியுமா? 

முத்து முத்தாக வியர்வை துளிர்க்கும் சிக்கல் சிங்காரவேலர் கோயில் அதிசயம்!

தந்தத்துக்கு நிகரான கொம்புகளைக் கொண்ட காண்டாமிருகங்கள்!

ஒரு நபரை முதல்முறை சந்திக்கப் போகும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT