கற்றாழை ஜூஸ் Vijay Kumar
வீடு / குடும்பம்

காலையில் ஒரு க்ளாஸ் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் நிகழும் அற்புதம்!

விஜி

யற்கையிலேயே நமக்குக் கிடைத்த ஒரு பெரிய மருந்து கற்றாழை. உடல் சூட்டை உடனடியாகத் தணிப்பதில் கற்றாழைக்கு ஒரு பெரிய சக்தி உண்டு என்றே சொல்லலாம். இதை தலையிலும் தேய்க்கலாம், முகத்திலும் தேய்க்கலாம், உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். இப்படி கற்றாழையை எந்த வகையில் எடுத்துக்கொண்டாலும் அது நமக்கு நல்லதையே செய்யும். அவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்ததுதான் கற்றாழை.

கற்றாழை செடியும் அப்படித்தான். எந்த இடத்தில் நட்டு வைத்தாலும் வளரக்கூடிய ஒரு நல்ல செடியாகும். இந்தச் செடியை வளர்க்க உங்களுக்கு அவ்வளவு செலவாகாது. ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன் நிரம்பியுள்ள கற்றாழை உச்சந்தலை முதல் பாதம் வரையான பராமரிப்புகளுக்கு உதவுகிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கிறது. கற்றாழையை சாறாக்கி காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் கற்றாழை ஜூஸ் தயாரிப்பது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: கற்றாழை - 1 விழுது, வெல்லம் - 120 கிராம், இஞ்சி - 15 கிராம், எலுமிச்சை - 1 பழம், தேன் - 3 டீஸ்பூன், தண்ணீர் - 3 கப்.

முதலில் எலுமிச்சம் பழத்தை வெட்டி நன்றாகப் பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். கற்றாழை மேல் தோல் சீவிக் கொண்டு அதில் உள்ள கற்றாழை ஜெல்லை தனியாக எடுத்துக்கொள்ளவும். அதை நன்றாக 8 லிருந்து 9 முறை கழுவ வேண்டும். அதில் அதிகளவில் கசப்புதன்மை உள்ளதால் அதை எந்த அளவுக்கு கழுவுகிறோமோ அதில் உள்ள கசப்புத் தன்மை குறையும். இஞ்சி தோலை நீக்கி அதை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கற்றாழை ஜெல்லை மிக்ஸி போட்டு அதில் வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். கற்றாழையில் சர்க்கரை சேர்க்கக் கூடாது. அதனால் வெல்லம் அல்லது கருப்பட்டி பயன்படுத்துவது நல்லது. இத்துடன் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு, தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை வடிகட்டியில் வடிகட்டி எடுத்தால் கற்றாழை ஜூஸ் ரெடி. இதை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அத்தனை நன்மையை தரும். இந்த ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் மூலம் நீங்கள் உடனே புத்துணர்ச்சி அடைய முடியும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT