வீடு / குடும்பம்

உப்பை இப்படி கூட பயன்படுத்தலாமா!

சி.ஆர்.ஹரிஹரன்

1. பாதம் நனையும் அளவுக்கு ஒரு அகலமான பாத்திரத்தில், மிதமான சூட்டில் வெந்நீர் எடுத்து அதில் கல் உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து பத்து நிமிடம் பாதங்களை நீரில் வைக்கவும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் கால்கள் மிருதுவாகவும், பளிச்சென்றும் இருக்கும். கால் வலி இருந்தாலும் தீர்வு கிடைக்கும்.

2. கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகள் வாடிப்போனால் நறுக்குவது சிரமமாக இருக்கும். அவற்றை உப்பு கலந்த நீரில் போட்டு வைத்திருந்தால் பிரெஷ் ஆகிவிடும். நறுக்குவதும் எளிதாகி விடும்.

3. ஒரு பக்கெட் தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு சேர்த்து, அதில் ஜீன்ஸ் பேன்டை ஊற வைத்து, பின், துவைத்தால் கலர் மாறாமல் அப்படியே நீடித்திருக்கும். முதல் முறை மட்டுமல்லாது ஒவ்வொரு முறை ஜீன்ஸ் பேன்டை துவைக்கும் போதும் இப்படி செய்யலாம்.

4. பண்டிகை சமயத்தில் செய்த பட்சணங்கள் மீதமிருந்தால், நீண்ட நாட்கள் அவை சிக்கு வாடை அடிக்காமல் இருக்க ஒரு துண்டு துணியில் கைப்பிடி கல் உப்பை போட்டு பட்சணங்கள் வைத்துள்ள பாத்திரத்தில் பட்சணத்துக்கு அடியில் போட்டு வைக்கவும்.

5. குத்துவிளக்கை முதலில் பழைய செய்தித்தாளால் துடைத்து, பின் புளி, உப்பு கொண்டு தேய்த்துக் கழுவினால் குத்து விளக்கு பளிச்சிடும்.

6. பிரிட்ஜில் இருக்கும் பிரீசரில் சிறிது கல் உப்பை தூவி வைத்தால் ஐஸ்கட்டி ட்ரேக்களை எளிதில் எடுக்கலாம்.

7. சமையல் அறையில் இருக்கும் தொட்டியில் நீர் போகாமல் அடைத்துக் கொண்டிருக்கிறதா? சிறிது கல் உப்பை இரவில் தொட்டியில் போட்டு வையுங்கள். காலையில் நீர் அடைப்பு அறவே நீங்கி விடும்.

8. புடவைகளுக்கு அடிக்கும் பால்ஸ்களை முதலில் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து, உலரவைத்து, பின் அயர்ன் செய்து தைத்தால் சாயமும் போகாது, ஓரமும் சுருங்காது.

9. அதுபோல சட்டை காலரில் அழுக்கு படிந்திருந்தால் சிறிது பொடி உப்பை அழுக்கு உள்ள பகுதிகளில் தேய்த்து சிறிது நேரம் கழித்து பிரஷ்ஷால் தேய்த்தால் அழுக்கு தேடினாலும் கிடைக்காது.

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT