Characteristics of people with dual personalities Characteristics of people with dual personalities
வீடு / குடும்பம்

டைப் A மற்றும் டைப் B இரண்டும் கலந்த ஆளுமைத்தன்மை உள்ளவர்களின் சிறப்பியல்புகள்!

எஸ்.விஜயலட்சுமி

னிதர்கள் பலவிதமான குணாதிசயங்களைக் கொண்டவர்கள். A வகை ஆளுமைகள் போட்டி மற்றும் இலக்கு சார்ந்த பணிகளில் சிறந்து விளங்குவார்கள். B வகை ஆளுமைகள் சிறந்த வேலை, வாழ்க்கை சமநிலையில் சிறந்து விளங்குவார்கள். இந்த இரண்டு வகை ஆளுமைகளின் குணாதிசயங்களையும் ஒருங்கே கொண்ட மனிதர்களின் சிறப்பியல்புகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

டைப் ஏ மற்றும் பி வகை ஆளுமைத்தன்மை: இவர்கள் போட்டித்திறன், லட்சியம், அதிக மன அழுத்த நிலைகள் மற்றும் சாதிப்பதற்கான வலுவான உந்துதல் போன்ற பண்புகளைக் கொண்டவர்கள். ஆனால், அவசரம் மற்றும் ஆக்ரோஷமான நடத்தையுடையவர்கள். இதற்கு நேர்மாறாக டைப் பி ஆளுமைகள். மிகவும் நிதானமான, எளிய வாழ்க்கை அணுகுமுறைகளால் குறைந்த மன அழுத்த நிலை, பொறுமையாக இருக்கும் போக்கு போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

ஏ மற்றும் பி வகை ஆளுமைகளின் கலவையாக இருப்பதன் நன்மைகள்:

இலக்கும், அடைவதற்கான பொறுமையும்: ஏ வகைஆளுமைத் தன்மையால் உயர்ந்த லட்சியம் மற்றும் இலக்குகளை கொண்டிருப்பார்கள். அதேசமயம் பி யின் பொறுமை மற்றும் நிதானமும் இவர்களிடத்தில் இருக்கும். நிதானமாக பொறுமையாக இலக்கை நோக்கிப் பயணித்து வாழ்க்கைக்கும் இலக்குக்குமான சமநிலையான அணுகுமுறையை கடைப்பிடிப்பார்கள்.

வளைந்து கொடுக்கும் தன்மை: ஏ மற்றும் பி யின் கலவையானது வெவ்வேறு சூழ்நிலைகளில் தகவமைப்பு செய்யப் பயன்படுகிறது. போட்டி பந்தயங்களில் வெற்றி பெறத் தேவையான கவனத்தை செலுத்த முடியும். அதேசமயத்தில் குற்ற உணர்ச்சி இன்றி ஓய்வு நேரத்தையும் ரிலாக்ஸாக அனுபவிக்கவும் முடியும்.

மன அழுத்த மேலாண்மை: துடிப்பான ஆற்றல் மிக்க மற்றும் ஓய்வெடுக்கும் பண்புகளுடன் ஏ, பி ஆளுமை மன அழுத்தத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியும். கடினமாக வேலை செய்யவும் இவர்களால் முடியும். அதேசமயத்தில் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்ள இலகுவாக நேரத்தை செலவழித்து தன்னை மெருகேற்றிக் கொள்ளவும் முடியும்.

உறவு மேலாண்மை: ஏ யின் உறுதியான தன்மை மற்றும் பி யின் சமூகத்தன்மை இரண்டும் கலக்கும்போது தனிப்பட்ட திறன்களை மேம்படுத்த உதவுவதோடு அல்லாமல் உறவு மேலாண்மைக்கும் மிகச் சிறந்த பாலமாக அமைகிறது. உறவுகள், நண்பர்கள் வட்டத்தில் எப்போதும் ஒரு இணக்கமான பிணைப்பை இவர்களால் உருவாக்க முடியும்.

சிக்கல்களை தீர்த்தல்: இவர்களால் சவால்களையும் சிக்கல்களையும் ஆக்கப்பூர்வமாக சமாளிக்க முடியும். திறந்த மனப்பான்மையுடன் புத்திசாலித்தனமான அணுகுமுறையை பயன்படுத்தி புதுமையான தீர்வுகளுக்கு வழி காண முடியும்.

இலக்கை அடைதல்: இலட்சிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை விடாமுயற்சியுடன் தொடரலாம். அதேநேரத்தில் பொறுமையாக இருந்து, வெற்றிக்கு நேரம் எடுக்கும் என்பதை புரிந்து கொண்டு நிதானமாக முன்னேறவும் வேண்டும் என்பதை இவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள்.

வேலை, வாழ்க்கை சமநிலை: ஆரோக்கியமான வேலை, வாழ்க்கை சமநிலையை நிறுவ முடியும். தனிப்பட்ட ஆர்வங்கள் மற்றும் ஓய்வு நடவடிக்கைகளை தியாகம் செய்யாமல் அதேசமயம் ஆர்வத்துடன் தொழிலையும், தனது பணியையும் தொடர முடியும்.

தலைமைத்துவ குணங்கள்: ஏ யின் துடிப்பான செயலாற்றல், பியின் ஆதரவுத் தன்மையுடன் இணையும்போது தனது பணியாளர்களை திறம்பட ஊக்குவிக்க முடியும். இது ஒரு நேர்மறையான பணி சூழலை வளர்க்க உதவுகிறது.

உணர்ச்சி நுண்ணறிவு: உணர்ச்சிவசப்பட்டு ரியாக்ட் செய்யாமல் உணர்ச்சி நுண்ணறிவை கடைப்பிடித்து பிறருடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதேசமயத்தில் தீர்க்கமான உணர்வுகளையும் வெளிப்படுத்த இவர்களால் முடியும்.

எனவே, ஏ மற்றும் பி இரண்டின் ஆளுமைத்தன்மை இணைந்த நபர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று அதேசமயம் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையையும் அனுபவிப்பார்கள்.

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

SCROLL FOR NEXT