Declining child births; Raising a child is becoming difficult! What is the reason? https://www.womensweb.in
வீடு / குடும்பம்

குறைந்து வரும் குழந்தைப் பிறப்பும்; கடினமாகி வரும் பிள்ளை வளர்ப்பும்! காரணம் என்ன?

எஸ்.விஜயலட்சுமி

முந்தைய தலைமுறையினருக்கு குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் எளிதான விஷயமாக இருந்தது. நான்கைந்து குழந்தைகளை கூட சிரமமின்றி வளர்த்தனர். நமது தலைமுறையில் ஒன்றிரண்டு குழந்தைகளை வளர்க்கிறோம். ஆனால், தற்போதைய இளம் பெண்களும் ஆண்களும் குழந்தைப்பேற்றை ஒரு சுமையாக நினைக்கிறார்கள்.

சமகாலத்தில் குழந்தை வளர்ப்பு சவாலாக இருப்பதற்கான காரணங்கள்:

1. தொழில்நுட்ப முன்னேற்றங்கள்: தொழில்நுட்ப பெருக்கத்தின் காரணமாக பெற்றோரின் மனநிலை மாறியுள்ளது. ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள், சமூக ஊடகங்கள் பெற்றோரின் இயக்கத்தை மாற்றியுள்ளன. தங்களது நேரத்தை சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட விரும்புகின்றனர். அதேசமயத்தில் தங்கள் குழந்தைகளும் ஆன்லைனில் அதிக நேரத்தை செலவிடுவதால் அவர்களை கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர். தவறான வழியில் தங்கள் பிள்ளைகள் சென்று விடுவார்களோ என்று எப்போதும் பயத்துடனே அவர்கள் இருக்க வேண்டியுள்ளது.

2. ஒற்றைப் பெற்றோர்: தற்போது ஒற்றைப் பெற்றோர் கொண்ட குடும்பங்களில், அலுவலக வேலை, வீட்டு வேலை மற்றும் குழந்தை பராமரிப்பு என்பது மிகுந்த சவாலான ஒரு விஷயமாக உள்ளது. அது அவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தையும் பொறுப்பையும் அளிக்கிறது.

3. பொருளாதார அழுத்தங்கள்: குழந்தையின் கல்வி, மற்ற தேவைகள் ஆசைகளை நிறைவேற்றுவது மற்றும் அன்றாட செலவுகளை சமாளிப்பது குழந்தையின் எதிர்காலத்திற்காக சேமிப்பது, அதனுடைய திருமணம் என்று பெற்றோருக்கான பொருளாதார அழுத்தங்கள் மிகுந்திருக்கின்றன. தேவைக்கு ஏற்ப ஊதியம் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. ஆசைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் ஊசலாடும் நிலை பல பெற்றோருக்கு இருக்கிறது.

4. அதிக எதிர்பார்ப்புகள் தரும் அழுத்தம்: பலரும் தங்களுடைய வாழ்க்கையை பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்து தானாகவே மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். தன் நண்பர்களைப் போல தானும் வாழ வேண்டும், தன் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு தகுதிக்கு மீறி செலவு செய்கிறார்கள். பிற குழந்தைகளைப் போல தன் குழந்தையும் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனரீதியாகவும் உணர்ச்சிரீதியாகவும் பெற்றோரையும் குழந்தைகளையும் பாதிக்கிறது.

5. சமூக மற்றும் கலாசார மாற்றங்கள்: பெற்றோரைப் பற்றிய சமூகத்தின் விதிமுறைகள் மற்றும் மதிப்புகள் காலப்போக்கில் மாறிவிட்டன. குழந்தை வளர்ப்பு முறையில் மிகப்பெரிய மாறுதல்கள் வந்துவிட்டன. பெற்றோர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டி உள்ளது. பிறர் வெளிப்படுத்தும் தேவையில்லாத விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

6. மனநலப் பிரச்னைகள்: குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இடையே மனநலப் பிரச்னைகள் அதிகமாகியுள்ளன. எப்போதும் பதற்றம், மனச்சோர்வு, அழுத்தம் போன்றவை அதிகளவில் உள்ளன.

குழந்தை பிறப்பு குறைந்து வருவதன் காரணம் என்ன?

சுதந்திரமான வாழ்க்கை முறை, கட்டுப்பாடற்ற போக்கு யாருடனும் ஒத்துப்போகாத மனநிலை என்பது சில இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் மனப்பாங்காக இருக்கிறது. குடும்பம் என்ற அமைப்புக்குள் தங்களை அடைத்துக்கொள்ள விரும்பவில்லை. திருமணத்தை விட லிவிங் டுகெதர் முறையை சிலர் விரும்புகிறார்கள். பிள்ளைப்பேறை ஒரு தொந்தரவாக நினைக்கிறார்கள். சைனா, ஜப்பான் போன்ற நாடுகளில் கூட குழந்தைப் பிறப்பு மிகவும் குறைந்து விட்டது.

இளைஞர்கள் மற்றும் யுவதிகள் குழந்தைப்பிறப்பையும், வளர்ப்பையும் மிக கடினமான வேலையாக நினைக்கின்றனர். ஆனாலும், குழந்தைகள் நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் அற்புதமான ஜீவன்கள் என்ற உணர்வையும், எத்தனை கஷ்டப்பட்டாலும் அவர்கள் நமக்குத் தரும் மகிழ்ச்சியும் நிறைவும் வேறு எதிலும் கிடைக்காது என்கிற புரிதலும் இருந்தால் குழந்தைப்பேறைத் தவிர்க்க மாட்டார்கள். அதேபோல, எத்தனை கடினமான சூழ்நிலையிலும் பிள்ளை வளர்ப்பை சரியாக கையாண்டால் அவர்களை நல்லவிதமாக வளர்க்க முடியும்.

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

SCROLL FOR NEXT