Cell phone while eating
Cell phone while eating 
வீடு / குடும்பம்

சாப்பிடும்போது பேசக்கூடாது! ஏன் தெரியுமா?

பொ.பாலாஜிகணேஷ்

நாம் எல்லோருமே அறியாமல் செய்யும் ஒரு தவறு என்ன தெரியுமா? சாப்பிடும்போது பேசுவது. இப்படி சாப்பிடும்போது பேசுவதால் என்னென்ன பிரச்னைகள் நம்மை பின்தொடரும் தெரியுமா? அக்காலத்தில் பெரியவர்கள் நாம் சாப்பிடும்போது பேசினால், ‘சாப்பிடும்போது என்ன பேச்சு? பேசாம சாப்பிடுங்க’ என்று சொல்வார்கள். ஆனால், இக்காலத்தில் செல்போன் ஒரு கையில் இல்லாமல் 70 சதவிகிதம் பேர் சாப்பிடுவதே இல்லை என்று கூட கூறலாம்.

காரணமில்லாமல், ‘சாப்பிடும்போது பேசக்கூடாது’ என்று பெரியவர்கள் சொல்லவில்லை. இந்த வார்த்தைக்குப் பின்னால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அது என்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

உணவு உண்பதற்கு பல விதிகள் உள்ளன. சமய நூல்களிலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. சொல்லப்போனால், பேசாமல் உணவை உண்ணும்போது, ​​அதை முழுவதுமாக மென்று சாப்பிடுவோம். அவ்வாறு சாப்பிடுவதால், உடலுக்கு அதன் முழுப் பலன் கிடைக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, தினமும் உண்ணும் உணவு கடவுள் நமக்காகக் கொடுத்த பிரசாதமாகக் கருதப்படுகிறது. எனவே, அதை சாப்பிடும்போது தேவையற்ற விஷயங்களைப் பேசாமல் உணவில் கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும். அதுதான் கடவுளுக்கு நாம் திருப்பி செய்யும் நன்றிக்கடனாகக் கருதப்படுகிறது.

சாப்பிடும் உணவை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. சாப்பிடும்போது பேசுவதன் மூலம் அந்த ஆற்றலைக் குறைகிறது மற்றும் மோசமான செரிமானத்தை ஏற்படுத்துகிறது. எனவே, சாப்பிடும்போது பேசக்கூடாது என்று கூறப்படுகிறது.

அவசர அவசரமாக சாப்பிடுவது பேச்சின் வேகத்தை குறைக்கும். ஆனால், உணவை நன்றாக மென்று சாப்பிட மறக்காதீர்கள். பெரியவர்கள், ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்று கூறியிருக்கிறார்கள். அதனால் இனிமேலாவது சாப்பிடும்போது உணவில் கவனம் செலுத்துங்கள். பேச்சில் வேண்டாமே.

குறிப்பாக, சாப்பிடும்போது செல்போனில் மெசேஜ் அனுப்புவது, செல்போனில் பேசுவது போன்ற வேலைகளை வைத்துக் கொள்ளாதீர்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் செயலாகும். சாப்பிடும் பத்து நிமிடமாவது நாம் செல்போனை பிரிந்து நமது உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவோம்.

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

SCROLL FOR NEXT