வண்ணங்களும் எண்ணங்களும் https://www.thoughtco.com
வீடு / குடும்பம்

மனித எண்ணங்களை மாற்றும் வண்ணங்களின் மகத்துவம் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும்போது அவரவர் தமக்குப் பிடித்த நிறத்தைத் தேர்வு செய்வார்கள். அந்த பெயிண்ட் நிறங்கள் மனிதர்களின் மனநிலை, எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நீலம்: இது அமைதியுடன் தொடர்புடையது. தளர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும். இந்த நிறத்தை படுக்கை அறைகள் அல்லது ஓய்வெடுக்கும் அறைக்கு தேர்வு செய்யலாம்.

பச்சை: இது சமநிலை மற்றும் நல்லிணக்க உணர்வை உருவாக்குகிறது. புத்துணர்ச்சி மற்றும் செழுமையை குறிக்கிறது. இது ஹால் பகுதிகள், பணியிடங்களுக்கு ஏற்றதாக அமைகிறது.

மஞ்சள்: ஆற்றல் மற்றும் நம்பிக்கையின் நிறம். இது மனநிலையை மேம்படுத்தி நேர்மறையான சக்தியை ஊக்குவிக்கும்.

சிவப்பு: இது தைரியம் மற்றும் உணர்ச்சி தூண்டுதலின் நிறமாகக் கருதப்படுகிறது. இதயத்துடிப்பு மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கும். பெரும்பாலும் ஆர்வம், உற்சாகம் மற்றும் பசியுடன் தொடர்புடையது. சில சமயங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் ஆவேச உணர்வுகளைக் கூட தூண்டலாம்.

ஊதா: இது நேர்மை மற்றும் ஆடம்பரத்துடன் தொடர்புடையது. நுட்பம் மற்றும் படைப்பாற்றல் உணர்வுகளைத் தூண்டும். படுக்கை அறைகள் மற்றும் கலைஞர்கள் பயன்படுத்தும் அறைக்கு இந்த நிறம் பொருத்தமாக இருக்கும்.

சாம்பல்: இது அமைதி மற்றும் நுட்பமான உணர்வை வெளிப்படுத்தும் ஒரு நடுநிலைமையான நிறம். நவீன உட்புற வடிவமைப்புகளுக்கு இந்த நிறத்தை பயன்படுத்தலாம். இந்த நிறத்தை வேறு எந்த நிறத்துடனும் இணைத்து பயன்படுத்தலாம்.

ஆரஞ்சு: இது உற்சாகம் மற்றும் ஆற்றலை ஊக்குவிக்கும் நிறமாகும். உடற்பயிற்சி செய்யும் அறைகள். விளையாட்டு பகுதிகளில் இந்த நிறத்தை பயன்படுத்தலாம்.

பிரவுன்: பழைமையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பாரம்பரியமான இடங்களில் இதைப் பயன்படுத்தலாம்.

வெள்ளை: தூய்மை மற்றும் எளிமையை குறிக்கும். ஆனால், அதிகப்படியாக வீட்டில் எல்லா இடங்களுக்கும் வெள்ளை நிறம் ஏற்றது அல்ல. இது ஒருவிதமான மனச்சோர்வை உண்டாக்குகிறது.

கருப்பு: இது நுட்பமான நிறமாகக் கருதப்படுகிறது. ஆனால், இது அறையை கனமாகவோ அல்லது இருட்டாகவோ உணர வைக்கும். அந்த மனநிலையை அறையில் வசிப்போருக்கும் அது உண்டாக்கலாம். எனவே, நல்ல வெளிச்சம் உள்ள வெளிப்புறப் பகுதிகளில் இதைப் பயன்படுத்தலாம்.

இளம் சிவப்பு: பெரும்பாலும் காதல் உணர்வுகள் மற்றும் மென்மைத்தன்மையுடன் தொடர்புடையது. இது ஒரு அமைதியான மனநிலையை உண்டாக்கும். படுக்கையறைகள் மற்றும் குழந்தைகள் அறைக்கு இதை தேர்ந்தெடுக்கலாம். அதேபோல குளியல் அறை மற்றும் ஹால் பகுதிக்கும் ஏற்றது.

பழுப்பு: இது ஒருவிதமான ஆறுதல் மற்றும் வசதியான உணர்வைத் தரும். பாரம்பரியமான இடங்களில் பின்னணியாகப் பயன்படுத்தலாம்.

டர்க்கைஸ் ப்ளூ: நீலத்தின் அமைதியையும் பச்சை நிறத்தின் புத்துணர்ச்சியும் கலந்த கலவை இது. வெப்ப மண்டல அல்லது கடலோர தீம்களுடன் தொடர்புடையது இந்த நிறம். தளர்வு மற்றும் அமைதியின் உணர்வுகளைத் தூண்டும். குளியலறைகள், படுக்கை அறைகள் போன்ற இடங்களில் இதை உபயோகிக்கலாம்.

தங்க நிறம்: ஆடம்பரம் மற்றும் செழுமையை குறிக்கும் வண்ணம் இது. சுவர்களில் வண்ணம் அடிக்கப் பயன்படுத்தாமல் உட்புறங்களில் உலோகப் பூச்சுகளாக பயன்படுத்துவார்கள். நேர்த்தியான மற்றும் நுட்பமான உணர்வுகளை இது தூண்டும்.

டீல்: செழுமையான மற்றும் துடிப்பான நிறம் டீல். நீலத்தின் அமைதியான குணங்களை பச்சை நிறத்தின் புத்துணர்ச்சியூட்டும் பண்புகளுடன் இணைக்கிறது. உட்புறங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. இதை நவீன மற்றும் பாரம்பரிய அமைப்புகளில் பயன்படுத்தலாம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT