Dance Health 
வீடு / குடும்பம்

உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் நடனத்தின் சிறப்புகள் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

டனம் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பலதரப்பட்ட நன்மைகளை வழங்கும் ஒரு பன்முக செயல்பாடு ஆகும். மேலை நாடுகளில் அக்டோபர் 15ம் தேதியை தேசிய நடன நாளாகக் கொண்டாடுகின்றனர். நடனம் ஆடுவதைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதுதான் இந்த நாளின் நோக்கம். நடனத்தை சிகிச்சையாகப் பயன்படுத்தி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சிறப்பான விளைவுகளைக் கொண்டு வருவதை மையமாக வைத்து இந்த நாளை கொண்டாடுகிறார்கள். நடனம் ஆடுவதின் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

உடல் சார்ந்த ஆரோக்கிய நன்மைகள்:

கார்டியோ வாஸ்குலர் ஃபிட்னஸ்: நடனம் என்பது ஒரு சிறந்த ஏரோபிக் உடற்பயிற்சியாகும். இது இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதத்துடன் தொடர்புடைய பல வகையான அபாயங்களை குறைக்க உதவுகிறது.

வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மை: பல நடன பாணிகளுக்கு உடலுக்கு வலிமை மற்றும் நெகிழ்வுத் தன்மை தேவைப்படுகிறது. வழக்கமான நடனப் பயிற்சி உடலின் தசைகளுக்கு வலிமை கூட்டி நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துகிறது.

ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலை: நடனம் ஆடுவது சிக்கலான இயக்கங்களை உள்ளடக்கிய ஒரு பயிற்சியாகும். இது உடலில் பாகங்களை ஒருங்கிணைத்து மற்றும் சமநிலையை மேம்படுத்துகிறது. வயதானவர்கள் தங்களை அறியாமல் கீழே விழும் அபாயத்தை குறைக்கிறது.

எடை மேலாண்மை: உடற்பயிற்சியின் ஒரு வடிவமாக நடனம் இருக்கிறது. இது உடலின் கலோரிகளை எரிக்க உதவுகிறது. அதனால் எடை இழப்புக்கு வழி வகுத்து சரியான எடையைப் பராமரிக்க உதவுகிறது.

மேம்படுத்தப்பட்ட தோரணை: சில நடன வடிவங்கள் சிறந்த உடல் தோரணையை தருகிறது மற்றும் சீரமைப்பை ஊக்குவிக்கிறது. தசைக்கூட்டு பிரச்னைகளின் அபாயத்தை குறைக்கிறது. மேலும் அழகான உடல் அமைப்பையும் தருகிறது.

நடனம் தரும் மனநல ஆரோக்கியம்:

மன அழுத்த நிவாரணம்: நடனம் ஆடும்போது மனதில் உள்ள அழுத்தங்கள், பதற்றம் போன்றவை வெளியேறி உற்சாகம் குடியேறுவதை நன்றாக உணரலாம். நடனமாடும் போது உடல் என்டார்ஃபின்களை வெளியிடுகிறது. மேலும் அவை அதிகரிக்க தூண்டுதலாக அமைகிறது. இதனால் மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் உள்ளத்தில் நிறைந்து கவலை, சோகம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. ஒட்டுமொத்த உணர்ச்சி நல்வாழ்வும் மேம்படுகிறது.

அறிவாற்றல் செயல்பாடு: நடன நடைமுறைகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் நினைவுத்திறன் மேம்படுவது மட்டுமல்லாமல் கவனம் மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் திறன்களும் மேம்படுகிறது.

சமூக இணைப்பு: நடனம் என்பது வகுப்புகள் நிகழ்ச்சிகள் அல்லது முறைசாரா அமைப்புகளில் சமூகத் தொடர்புகளை உள்ளடக்கியது. இது சமூக இணைப்புக்கு இட்டுச் செல்வதோடு மட்டுமல்லாமல், தனிமையின் உணர்வுகளை எதிர்த்து பலருடன் நட்புறவை வளர்க்கும்.

தன்னம்பிக்கை: நடனமாடும் நபர்கள் தங்களது தன்னம்பிக்கை உயர்வதை உணரலாம். அவர்களின் சுயமரியாதை மற்றும் சுயவெளிப்பாடு அதிகரிக்கும்.

மைண்ட்ஃபுல்னெஸ்: நடனத்தில் ஈடுபடுவது நினைவாற்றலை ஊக்குவிக்கிறது மேலும் அந்தந்த கணத்தில் வாழ உதவுகிறது இதனால் செய்யும் வேலையில் கவனமும் சுய விழிப்புணர்வும் வளர்கிறது.

நடன சிகிச்சை: நடனம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். இது எல்லா வயதினருக்கும் திறன்களுக்கும் ஏற்ற ஒரு வேடிக்கையான மற்றும் பயனளிக்கும் செயலாகும். மன அழுத்தம், பதற்றம் மற்றும் அதிர்ச்சி ஆகியவற்றிற்கு நடனம் உதவுகிறது என்று சிகிச்சையாளர்களும் மருத்துவர்களும் வலியுறுத்துகின்றனர். இது மனத்தெளிவு மற்றும் உணர்ச்சி சமநிலையை மேம்படுத்துகிறது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT