யானை அதன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுகொள்ளுமாம். இதை, ‘ஒருவர் செய்யும் செயல் சரியில்லை’ என்று கூறுவதற்காக உவமையாக சொல்லப்படுவது. ஆனால், உண்மையிலேயே யானை தனது தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொள்வதன் பின் இருக்கும் காரணத்தைக் கேட்டால் வியந்து போவீர்கள்?
யானை தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுகொள்வதன் காரணம், சூரிய கதிரிலிருந்து தனது உடலை பாதுகாத்து கொள்ளவும், பூச்சிகளை தன்னிடம் வர விடாமல் விரட்டவும்தான். மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்வதால் அது காய்ந்து யானையின் உடலை குளிர்க்காலத்தில் சூடாகவும், சேற்றை தடவுவதால் வெயில் காலங்களில் யானையின் உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும்.
இப்படி அறிவாளித்தனமாக யானை யோசிப்பதைத்தான் நாம் கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம். எனவே, வெளியிலிருந்து ஒரு விஷயத்தை பார்க்கும் ஒருவருக்கு உண்மையிலேயே நாம் என்ன செய்கிறோம் என்பதைப் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. எனவே, ஒரு விஷயத்தை மட்டும் நாம் எப்போதும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது, அப்படிப்பட்ட அறிவுரைகள் நம்மை பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்வதேயாகும்.
ஏனெனில், அவர்களுக்கு நாம் செய்துகொண்டிருக்கும் செயலோ, அதனால் ஏற்படப்போகும் பலனோ அல்லது நம்முடைய தொலைநோக்கு பார்வையோ புரியப்போவதில்லை, எடுத்துக் கூறினாலும் விளங்கப்போவதில்லை. எனவே, மற்றவர்களின் அறிவுரையால், நாம் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.
ஹாரிப்பாட்டரில் நடித்த டேனியல் ரெட்கிளிப்பிற்கு தன்னுடைய சிறு வயதிலேயே பேர், பணம், புகழ் என்று எல்லாமே கிடைத்துவிட்டது. இதுவே, ஜோ பைடனோ தன்னுடைய 81ஆவது வயதிலேயே அமேரிக்க ஜனாதிபதியானர். ஒருவருக்கு ஆறு வயதில் கிடைக்கும் வெற்றி, இன்னொருவருக்கு அறுபது வயதிலே கிடைக்கிறது. அதற்காக யாரும் இங்கு உழைக்கவில்லை என்று அர்த்தமில்லை. அவரவருக்கான நேரம் வரும் வரை அமைதியாக முயற்சித்தால் வெற்றியடையலாம் என்பதே பொருள்.
எனவே, அதுவரை பொறுமையாக யாரை பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் செய்யும் செயலை செய்யுங்கள். யானை எப்படி தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுகொள்கிறதோ, அப்படித்தான் மற்றவர்கள் ஏளனத்தையும் பொருட்படுத்தாது இருப்பது!