Tea Biscuits baibaz
வீடு / குடும்பம்

பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் தெரியுமா?

ஜெயகாந்தி மகாதேவன்

ம்மில் பலர் பிரேக்ஃபாஸ்டுக்கு முன்பு காபியுடன் சில பிஸ்கட்கள் எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். மாத்திரை உட்கொள்ள, பசி தாங்கவென்று அதற்கான சில காரணங்களைக் கூறுவதையும் கேள்விப்படுகிறோம். இப்படி பிஸ்கட் சாப்பிடுவதால் சில பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

* பிஸ்கட்டில் உள்ள அதிகப்படியான சர்க்கரை முகப் பரு தோன்றுவதற்குக் காரணமாகிறது.

* பிஸ்கட் குறைந்த அளவு கரையும் நார்ச்சத்து கொண்டிருப்பதால் ஜீரணக் கோளாறு மற்றும் பேதி ஏற்பட வாய்ப்புண்டு.

* இரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் அபாயம் உண்டு.

* பிஸ்கட்டில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து இல்லாததால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.

* பிஸ்கட்டில் நீர்ச்சத்து குறைவாக உள்ளதால் நீரிழப்பு ஏற்படும் அபாயம் வருவதற்கு வாய்ப்புண்டு.

* பிஸ்கட் தயாரிப்பில் சேர்க்கப்படும் கூட்டுப்பொருட்களில் அலர்ஜி தரும் பொருள் ஏதாவது இருந்தால் ஒவ்வாமை ஏற்படக்  கூடும்.

* குறைந்த அளவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

* சாச்சுரேட்டட் மற்றும் ட்ரான்ஸ் ஃபேட் (trans fat) அதிகளவு பிஸ்கட்டில் உள்ளதால் இதய நோய் உருவாகும் வாய்ப்புள்ளது.

* பிஸ்கட் அதிகளவு கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் கொண்டுள்ளது. இதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.

மேற்கூறிய பக்க விளைவுகளைக் கருத்தில் கொண்டு, அடிக்கடி அதிக அளவில் பிஸ்கட் உண்பவர்கள் கவனமாக இருப்பது நலம்.

நாம் எதற்காகப் படைக்கப்பட்டோம்?

திருவிழாக்களில் கொடியேற்றம் மற்றும் வாகன பவனியின் தத்துவம் தெரியுமா?

வெற்றிக்கு உதவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கற்க வேண்டிய 7 பழக்கங்கள்!

அத்திப்பழம் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிடேரியன் ஃபுரூட்டா?

ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வாழைப்பூ!

SCROLL FOR NEXT