முப்பது வயதில் நாம் சில விஷயங்களில் துடிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில், அப்போதுதான் சில கடமைகளுக்குள் செல்கிறோம். உதாரணத்திற்கு, ஒரு குடும்ப உறவுக்குள்ளோ, குழந்தைகளை வளர்ப்பதிலோ இல்லை நாம் செய்யும் வேலைகளிலோ இருக்கலாம். சில பொறுப்புகள் வரும்போது தனிப்பட்ட விதத்தில் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
எதிர்மறை எண்ணங்களைக் கொண்டிருக்கும் நபர்களை விட்டு விலகியிருங்கள்: மற்றவர்களின் எதிர்மறை எண்ணங்கள் உங்களின் தன்னம்பிக்கை உணர்வுகளையும் நேர்மறை எண்ணங்களையும் பாதிக்கும். இந்த எதிர்மறை எண்ணம் என்பது ஒருவரது குணங்களை அமைதியாக கொல்லக்கூடியது. நீங்கள் ஒருவரைப் பார்த்த பின்னர் புத்துணர்வாக இருக்கிறீர்களா அல்லது தன்னம்பிக்கை இல்லாதது போல் உணர்கிறீர்களா என்பதைப் பார்த்துவிட்டு தொடர்ந்து பழகுங்கள்.
நிறைய கற்றுக்கொள்ளுங்கள்: இந்த முப்பது வயதில் நாம் அதிகம் கற்றுக்கொள்வது அவசியம். இந்த வயதில் நீங்கள் பல்வேறு குணம் கொண்ட மனிதர்களை சந்திப்பீர்கள். அதேபோல், நிறைய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சில சூழ்நிலைகளை சமாளிக்க அப்போது நீங்கள் கற்றுக்கொள்வதுதான் கைக்கொடுக்கும்.
முதலில் ஒருவரிடம் எப்படி தொடர்புக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிக் கற்றுக்கொள்ளுங்கள். எந்த நேரத்தில் யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
தலைமைத் தாங்க பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுடைய முப்பது வயதில் நீங்கள் கொஞ்சம் அனுபவம் வாய்ந்தவராக மாறும்போது தலைமை பொறுப்பு எப்போது வேண்டுமென்றாலும் உங்களைத் தேடி வரும். அப்போது நீங்கள் அதற்குத் தயாராக இருப்பது அவசியம்.
இயற்கைக்கு முக்கியத்துவம் அளியுங்கள்: நமது வாழ்க்கையில் இயற்கை ஒரு முக்கியமானப் பங்கை வகிக்கிறது. உடல் நலத்திற்கும் சரி, மன நலத்திற்கும் சரி இயற்கை மிக முக்கியம். ஆகையால், தினமும் இயற்கையோடு காலை மற்றும் மாலை ஒரு அரை மணி நேரம் செலவிடுங்கள். இந்த உலகம் கொடுத்த பரிசைப் பயன்படுத்தாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்.
தினமும் ஒரு சதவீதம் முன்னேறுங்கள்: எப்போதோ செய்யும் பெரிய முயற்சியை விட, தினமும் தொடர்ச்சியாக செய்யும் சிறிய முயற்சிகளே சிறந்தது. அதேபோல், பெரிய வெற்றிகளை எதிர்ப்பார்க்காமல் சிறிய சிறிய வெற்றிகளில் திருப்தி அடையுங்கள்.
ஆரோக்கியமான உணவு = ஆரோக்கியமான வேலை: முதலில் உங்களை நீங்கள் கவனித்துக்கொள்வதே உங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு சிறந்த வழி. நன்றாக உறங்குங்கள், தியானம் செய்யுங்கள், எடையைக் கூட்டிக்கொள்ளுங்கள்.
எப்போதும் சரியான வழிகளைத் தேர்ந்தெடுங்கள்: சரியான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் முதலில் பெரிய வழியையும் அதிக வாய்ப்புகள் இருக்கும் வழியையும் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
சிங்கம் போல் வேலை செய்ய வேண்டும்: குறைந்த கவனத்துடன் அதிக நேரம் வேலை பார்த்து குறைந்த தரத்தில் முடிவை கொடுப்பதைவிட, குறைந்த நேரத்தில் முழு கவனத்துடன் நல்ல முடிவைக் கொடுக்கலாம். நன்றாக ஓய்வெடுத்துவிட்டு வேலை செய்தால் கவனம் அதிகமாகும்.
இந்த ஏழு விதிமுறைகளை உங்களுடைய முப்பது வயதில் பின்பற்றினால் வாழ்வில் ஒரு தெளிவு கிடைக்கும்.