Things to Share in a Relationship for Strong Connection 
வீடு / குடும்பம்

ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் கட்டாயம் பகிர்ந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!  

கிரி கணபதி

ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான உறவுக்கு, வெளிப்படையான தொடர்பு மற்றும் பகிர்ந்து கொள்வது மிகவும் முக்கியமானவை. உங்கள் வாழ்க்கையின் சில முக்கியமான அம்சங்களை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வதால் நம்பிக்கை, புரிதல் மற்றும் உறவுக்கு மத்தியில் வலுவான இணைப்பு உருவாக்க உதவும். இந்தப் பதிவில் ஒரு உறவில் ஒருவருக்கொருவர் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

தனிப்பட்ட அனுபவங்கள்: உங்களது கடந்த காலத்தில் நடந்த தனிப்பட்ட கதைகள் மற்றும் அனுபவங்களை உங்கள் துணையுடன் பகிர்வதன் மூலம் உங்கள் பயணத்தை உங்கள் துணை புரிந்து கொண்டு, உங்களிடம் சரியாக நடந்து கொள்ள உதவும். குறிப்பாக, உங்களது குழந்தை பருவ நினைவுகள், குறிப்பிடத்தக்க வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் போன்றவற்றை பகிரவும். இப்படி உங்களுக்கு நெருக்கமான விஷயங்களைப் பகிர்வதன் மூலம் உங்கள் இருவருக்கும் மத்தியில் ஆழமான புரிதல் ஏற்படும். 

உங்களது கனவுகள்: அதாவது எதிர்காலத்தில் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்கிற உங்களது கனவை உங்கள் துணையுடன் விவாதிப்பது, எதிர்காலத்தில் உங்களுக்கு அவர் உறுதுணையாக இருக்க உதவும். எனவே உங்களது இலக்குகள் மற்றும் லட்சியங்களைப் பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் ஆதரவளித்து மகிழ்ச்சியாக இருக்க முற்படுங்கள். 

உங்களது மதிப்புகள்: நீங்கள் எதையெல்லாம் அதிகமாக மதிப்பீர்கள், நம்புவீர்கள் என்பதைப் பற்றி துணையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்கள் துணை உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெரியப்படுத்தும்.‌ இதன் மூலமாக ஒருவரின் மீது ஒருவருக்கு மதிப்பு அதிகமாகி உறவு முறையில் சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும். 

எல்லைகள் மற்றும் எதிர்பார்ப்புகள்: உங்களுக்கு எதுபோன்ற விஷயங்கள் பிடிக்காது மற்றும் நீங்கள் எதையெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக விவாதிப்பது உறவில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதற்கு முக்கியமானது. உங்களுக்கான நேரம், தனிப்பட்ட இடம், பிரைவசி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகப் பகிரவும். 

உங்களது ஆர்வங்கள்: உங்களது ஆர்வங்கள், பொழுதுபோக்குகள் போன்றவற்றை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது இருவரும் விரும்பும் விஷயங்களை ஒன்றாக சேர்ந்து செய்வதற்கு வழிவகுக்கும். அது தவிர பிடித்த விஷயங்களை உங்களுக்கு சர்ப்ரைஸாக செய்து கொடுத்து, உறவை வலுப்படுத்தவும் உதவியாக இருக்கும். 

ஆதரவாக பேசுவது: ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளில் உங்களது துணைக்கு ஆதரவாக பேசுங்கள். அவர்களது மனம் தளர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது அவர்களது தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவித்து, உறவுக்கு மத்தியில் பிணைப்பை வலுப்படுத்தும். மேலும் உங்களது கவலைகள், பரிந்துரைகள், கோபம் போன்றவற்றை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளுங்கள். 

இந்த விஷயங்களை ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலே உங்களது உறவில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாது. இதுவே, ஒருவர் பகிர்ந்து கொண்டு மற்றொருவர் எதையும் பகிராமல் இருந்தால், அதை காரணமாகக் காட்டி பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே உங்களது உறவு என்றென்றும் நீடித்திருக்க இதுபோன்ற வெளிப்படையான தொடர்புகள் மிகவும் முக்கியம்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT