6 tips to make home beautiful Image Credits: Youtube
வீடு / குடும்பம்

உங்கள் வீட்டை அழகாக்க இந்த 6 டிப்ஸ்களை பின்பற்றலாமே!

நான்சி மலர்

வீட்டை கட்டி விட்டால் மட்டும் போதாது, அதை அழகாக பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமாகும். நம்முடைய வீட்டைஅழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே உண்டு. அதற்கான 6 டிப்ஸ்களை இந்தப் பதிவில் காணலாம்.

Hexagon wall stickers: சாதாரணமாகத் தெரியும் சுவற்றில் Hexagon wall stickers பயன்படுத்துவதன் மூலம் சுவற்றை மிகவும் அழகாக மாற்றலாம். இதை வீட்டின் சுவற்றில் அலங்காரத்திற்காக பயன்படுத்துவார்கள். படுக்கையறை, கேபினேட், தொலைக்காட்சிக்கு பின்புறம் உள்ள சுவர், குளியலறை என எங்கு வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம்.

Self adhesive tiles: ஏற்கெனவே சுவற்றில் இருக்கும் டைல்ஸ்களின் டிசைனோ அல்லது நிறமோ பிடிக்கவில்லை என்றால் உடைக்க தேவையில்லை. Self adhesive tiles ஐ அதன் மீது ஒட்டி உங்களுக்கு பிடித்த மாதிரி வீட்டினை அழகாக மாற்றிக்கொள்ளலாம்.

Command strip: வீட்டில் போட்டோ அல்லது டெக்கரேஷன் செய்ய வேண்டுமென்றால் இனி ஆணி அடிக்கத் தேவையில்லை. அதற்கு பதில் command strip ஐ பயன்படுத்தலாம். இது 7 கிலோ வரை எடையை தாங்கும். முக்கியமாக, எடுக்கும்போது பெயின்ட் பிய்த்துக்கொண்டு வராது.

Readymade curtains: நிறைய விதவிதமான டிசைன்களில் ரெடிமேடாக திரைச்சீலைகள் தற்போது கிடைக்கின்றன. அதை பயன்படுத்துவது அறையை மேலும் அழகாக்கும்.

Lights: வீட்டில் False ceiling வைக்க முடியாதவர்கள். Decorative lights, Pendent lights, lamps போன்ற விதவிதமான விளக்குகளை வைப்பதனால் வீட்டை இன்னும் அழகாக மாற்றலாம்.

Foyer decorationள்: உங்கள் வீட்டிற்கு வருபவர்கள் உங்களது வீட்டைப் பார்த்து சூப்பரா இருக்குன்னு சொல்லணுமா? அப்போ முதல் இம்ப்ரஷனை பெஸ்டாகக் கொடுங்கள். வீட்டின் நுழைவாயிலான Foyerல் எல்லோரும் செய்யும் பெரிய தவறு அங்கே ஷூ ரேக் வைப்பதுதான். ஆனால், நம் வீட்டிற்கு வருபவர்கள் முதலில் பார்க்கும் இடம் Foyerதான். இதனால் முதல் விஷயம் இங்கே ஒரு art piece or metal art வைக்கவும். அடுத்து Seating space with storage cabinet போன்று அமைப்பது குடை, ஷூ, ரெயின் கோட் போன்றவற்றை கேபினேட்டில் வைத்துக்கொள்வதற்காகச் செய்யப்படுவது. இந்த இடத்தை எவ்வளவு அழகாக மாற்றுகிறோமோ அவ்வளவு அழகாக வீடு மாறும். இந்த டிப்ஸை எல்லாம் பின்பற்றி உங்கள் வீட்டை மேலும் அழகாக மாற்றுங்களேன்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT