வீடு / குடும்பம்

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் நான்கு பழங்கள்!

ஆர்.மகாதேவன்

நாம் சாப்பிடும் உணவுகளும் குடிக்கும் பானங்களும் கொலஸ்ட்ரால் அளவை பெரிதும் பாதிக்கிறது அந்த வகையில் இந்த நான்கு பழங்கள் கொலஸ்ட்ராலை குறைப்பதில் பெரும்   பங்கு வகிக்கிறது.

அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையை அலட்சியம் செய்வது உயிருக்கே ஆபத்து தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சியோடு உணவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் சாப்பிடும் உணவுகளும் குடிக்கும் பானங்களும் கொலஸ்ட்ரால் அளவை பெரிதும் பாதிக்கிறது. அந்த வகையில் இந்த  நான்கு பழங்கள் கொலஸ்ட்ராலை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவை இரத்த தமனிகளில் குவிந்துள்ள கொழுப்பை விரைவாக கரைக்க உதவுகிறது.

வாழைப்பழம்: உடல் எடையை அதிகரிக்க பலரும் பயன்படுத்தப்படும் வாழைப்பழம் கொலஸ்ட்ராலை குறைக்கும் என்று எப்போது நினைத்ததுண்டா? ஆம். கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடுவது உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம். வாழைப்பழம் ரத்த அழுத்தத்தை கட்டப்படுத்தவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

ஆரஞ்சு : கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில்  ஆரஞ்சு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை ரத்தக் குழாய்களில் இருந்து அகற்ற உதவும். ஆரம்பம் மட்டுமல்ல மற்ற சிட்ரஸ் பழங்களையும் இப்பொழுது கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

அன்னாச்சி பழம் : கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு அன்னாசி பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த பழம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் புதையல் ஆகும் அன்னாசி பழத்தில் இருக்கும் ப்ரோமிலின் தமனிகளில் சேரும் கொழுப்பை உடைத்து அதை நீக்குகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.

அவகோடாவை : உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என பல ஆய்வுகளில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆராய்ச்சியின் படி இந்த வெண்ணைப் பழத்தில் ஓலிக் அமிலம் உள்ளது. இது உடலில் இருந்து இரத்த ஓட்டத்தின் நடுவில் வரும் கொலஸ்டரை நீக்குகிறது. இது ரத்தத்தின் தமனிகளை சுத்தம் செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT