Free Helpline Numbers 
வீடு / குடும்பம்

அவசர காலங்களில் உங்களுக்கு உதவும் உதவி எண்கள் இதோ!

ரா.வ.பாலகிருஷ்ணன்

விபத்து, இரத்தம் தேவை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற அவசர காலங்களில் உடனே உதவிட யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா! அவ்வகையில் அவசரத் தேவைக்கான அரசின் உதவி எண்களை இங்குப் பட்டியலிட்டுள்ளோம்.

அனைவருமே ஏதாவது ஒரு நிலையில் கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டி வரலாம். அப்போது யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நீங்கள் பதட்டமாக இருப்பீர்கள். இம்மாதிரியான சூழலை எதிர்கொள்ளும் போது நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்காகத் தான் அரசு சார்பில் பல இலவச உதவி எண்கள் உள்ளன. அவசர காலங்களில் நீங்கள் இந்த உதவி எண்களைத் தொடர்பு கொண்டால், கூடிய விரைவில் உங்களுக்குத் தேவையான உதவி கிடைக்கும்.

இருப்பினும் தேவைக்கு ஏற்ப பல இலவச எண்கள் இருப்பதால், அனைத்தையும் நம்மால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாதல்லவா! ஆகையால் அனைத்து விதமான இலவச உதவி எண்களையும் ஒரு பிர்ண்ட் எடுத்து வீட்டில் ஒட்டி விடலாம். நாள்தோறும் இதனைக் காணும் போது அவசர காலங்களில் உங்களுக்கு உதவி எண்கள் தொடர்பான சிந்தனை நினைவுக்கு வரும்.

இன்றைய காலகட்டத்தில் தான் கைபேசிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறதே. ஆகையால் அவசர கால உதவி எண்களை கைபேசியிலும் சேமித்துக் கொள்ளலாம் அல்லது புகைப்படம் எடுத்தும் வைத்துக் கொள்ளலாம். பொதுவாக பலருக்கும் விடுமுறை தினங்கள் மற்றும் இரவு நேரங்களில் தான் பல அவசரமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. இம்மாதிரியான நேரங்களில் இந்த உதவி எண்கள் உங்களுக்கு நிச்சயமாக கைகொடுக்கும்.

நமக்கு மிகவும் தேவையான சில இலவச எண்களின் விவரம் இதோ!

காவல் கட்டுப்பாட்டு அறை - 100

தீயணைப்புத் துறை - 101

ஆம்புலன்ஸ் உதவி எண் - 102 & 108

போக்குவரத்து காவலர் -103

பான்-இந்தியா அவசர உதவி எண் - 112

ரயில்வே முன்பதிவு விசாரணை - 132

தானியங்கி ரயில்வே முன்பதிவு வினவல் - 139

பெண்கள் பாதுகாப்பு - 181 & 1091

பிஎஸ்என்எல் தொலைபேசி டைரக்டரி வினவல் - 197

பிஎஸ்என்எல் தொலைபேசி உள்ளூர் உதவி - 199

இயற்கை பேரிடர்களுக்கான நிவாரண ஆணையர் - 1070

ரயில்வே விபத்து அவசர சேவை - 1072

சாலை விபத்து அவசர சேவை - 1073

பேரிடர் கால உதவி - 1077

நிலநடுக்கம் அவசர உதவி - 1092

எய்ட்ஸ் ஹெல்ப்லைன் - 1097

குழந்தைகள் பாதுகாப்பு - 1098

எரிவாயு ஹெல்ப்லைன் - 1716

எரிவாயு கசிவு அவசரத் தொடர்புக்கு - 1906

சென்னை கார்ப்பரேஷன் புகார்கள் - 1913

கண் வங்கி - 1919

சைபர் குற்றங்கள் தடுப்பு உதவி எண் - 1930

மூத்த குடிமக்கள் உதவி எண் - 14567

பள்ளிக் கல்வித்துறை உதவி எண் - 14417

லயன்ஸ் இரத்த வங்கி - 28415959

செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அசோசியேஷன் - 28194630

தமிழ்நாடு அரசின் சுற்றுலா அலுவலகம் - 25368538

இந்திய அரசின் சுற்றுலா அலுவலகம் - 28460285

இலவச உதவி எண்களில் இருக்கும் மற்றொரு சிறப்பு என்னவென்றால், உங்கள் மொபைலில் பேலன்ஸ் இல்லயென்றாலும் கூட இந்த எண்களைத் தொடர்பு கொண்டு உதவியைப் பெற முடியும். இனியும் தாமதிக்காமல் இலவச உதவி எண்களை சேமித்துக் கொள்ளுங்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT